ஒன்றிய அரசின் மூன்று வேளாண் சட்டங்கள் ரத்து: விவசாயிகளின் வரலாற்று வெற்றி-கார்த்திகேய சிவசேனாபதி கருத்து..!

பிரதமர் நரேந்திர மோடி மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படுவதாக நேற்று அறிவித்தார். இது விவசாயிகளின் வரலாற்று வெற்றி என திமுக சுற்றுச்சூழல் அணி மாநிலச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி கருத்து தெரிவித்துள்ளார்.


கோவை: மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படுவது விவசாயிகளின் வரலாற்று வெற்றி என திமுக சுற்றுச்சூழல் அணி மாநிலச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி கருத்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படுவதாக நேற்று அறிவித்தார். இந்த அறிவிப்பு பற்றி திமுக சுற்றுச்சூழல் அணி மாநிலச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் என்ற விவகாரத்தில் விவசாயிகளின் இடையறாத போராட்டமும், அவர்களின் துணிச்சலுமே ஒன்றிய அரசைப் பணிய வைத்துள்ளது. ஒரு ஆண்டுக்கும் மேலாக வெயில், மழை, குளிர் என எதையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் போராடி வந்தனர்.

இப்போராட்டமானது விவசாயிகளுக்காக என்று சிறிய வட்டத்தில் சுருக்காமல் இந்த சட்டத்தால் நாடே எதிர்கொள்ளப் போகும் பிரச்சனைகளைத் தெளிவாகக் கூறி போராட்டத்தை மேற்கொண்டனர். நாட்டு மக்களின் நலனிற்கான உறுதிமிக்க போராட்டமாக நடத்திய விவசாயப் பெருங்குடி மக்களின் போர்க்குணம் போற்றுதலுக்குரியது.

தமிழர்களின் வாழ்வியலில் வேளாண்மையும், வேளாண் மக்களும் என்றுமே உயர்குடி மக்களாகப் போற்றி வணங்கப்பட்டவர்கள். வட இந்தியக் கலாச்சாரங்களுக்கும், திராவிட கலாச்சாரங்களுக்கும், குறிப்பாகச் சங்க இலக்கியத்தில் குறிப்பிடக் கூடிய நாகரிகத்துக்கும் உள்ள வேற்றுமை யாதெனில், வட இந்தியாவில் விவசாயம் செய்பவர்களைத் தாழ்ந்தவர்களாக, சமூகத்தில் குறைந்த மதிப்புடையவர்களாகப் பார்க்கும் மனப்பான்மை அன்றும் இன்றும் நிலவி வருகின்றது.

ஆனால் தமிழகத்தில், தமிழில், நமது சங்க இலக்கியத்தில் வேளாண் செய்தவர்களை எல்லோரையும் விட உயர்ந்தவர்களாகக் கருதும் குணமுடையவர்களாகவே இருந்து வருகின்றனர்.

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்.

வள்ளுவரின் திருக்குறளிலும் விவசாயிகளின் உயர்வு எடுத்துரைக்கப்பட்டுள்ளது. வணிகம் , வர்த்தகம் சார்ந்தோரும் வேளாண் செய்தோருக்கு எத்தகைய முக்கியத்துவம் வழங்கினார்கள் என்பதைத் தமிழ் நூல்கள் மூலம் நாம் பல இடங்களில் உணர முடிகின்றது. ஆனால் இது போல் வட இந்திய வேத நூல்களில் வேளாண்மையைப் போற்றும் குறிப்புக்கள் எதுவும் இல்லை. இந்த வேறுபாடு இன்று வரை தொடர்கிறது.

மேலும், கடந்த அதிமுக ஆட்சியின் ஆதரவோடு கடந்த ஓராண்டிற்கு முன்பாகக் கொண்டு வரப்பட்ட இந்த வேளாண் சட்டத்தை எதிர்த்து தமிழக விவசாயிகள், விவசாயச் சங்கங்கள் சார்பாக டெல்லி போராட்டத்தில் பங்கேற்றதைத் தவிரத் தமிழ்நாட்டில் பெரும் போராட்டங்கள் எதுவும் நடைபெறவில்லை. காரணம் அப்போது விரைவில் சட்டமன்றத் தேர்தல் தமிழ்நாட்டில் நடைபெறும் சூழல் இருந்தது.

ஆட்சி மாற்றம் மூலம் கழகத் தலைவர் மு க ஸ்டாலின் முதல்வரானதும் தமிழ்நாட்டில் இந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படாது என்ற நம்பிக்கை விவசாயிகளிடத்தில் இருந்தது.

அவர்களின் நம்பிக்கையைக் காப்பாற்றும் விதத்தில் 2021ல் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரிலேயே மூன்று வேளாண் சட்டங்களையும் எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றியவர் முதல்வர் மு க ஸ்டாலின் என்பதை நாம் நினைவில் கொள்வோம். இதே போன்று பல்வேறு பிரச்சனைகளுக்கு ஒற்றுமையோடு செயல்பட்டு நாட்டு மக்களின் நலனைப் பாதுகாப்போம்."

இவ்வாறு அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...

நான்கு நாட்களில் சிறுவாணி அணையில் நீர்மட்டம் ஏறத்தாழ 2.5 அடி உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஜூலை 28ல் 20.27 அடியிலிருந்த...