சொத்துக்குவிப்பு வழக்கில் தி.மு.க முன்னாள் அமைச்சர் நீதிமன்றத்தில் ஆஜர்.!!

சொத்துக் குவிப்பு வழக்கில், முன்னாள் அமைச்சர் பழனிச்சாமி, கோவை நீதிமன்றத்தில் ஆஜரானார். வழக்குப் பதிவு செய்த அதிகாரி, அப்போதைய ஏ.டி.எஸ்.பி., சண்முகபிரியாவிடம் குறுக்கு விசாரணைக்கு வரும் 17-க்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.


கோவை: சொத்துக் குவிப்பு வழக்கில், முன்னாள் அமைச்சர் பழனிச்சாமி, கோவை நீதிமன்றத்தில் ஆஜரானார். வழக்குப் பதிவு செய்த அதிகாரி, அப்போதைய ஏ.டி.எஸ்.பி., சண்முகபிரியாவிடம் குறுக்கு விசாரணைக்கு வரும் 17-க்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தி.மு.க., ஆட்சிக் காலத்தில், 2006- 2011ல் அமைச்சராக இருந்தவர் பொங்கலூர் பழனிச்சாமி. வருமானத்துக்கு அதிகமாக, 44 லட்ச ரூபாய்க்குச் சொத்து குவித்ததாக, கோவை லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்குப் பதிவு செய்தனர். கோவை மாவட்ட செஷன்ஸ் கோர்ட்டில், வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

அரசு தரப்பு மற்றும் எதிர்த்தரப்பு சாட்சிகளிடம் விசாரிக்கப்பட்ட நிலையில், வழக்குப் பதிவு செய்த அதிகாரி, அப்போதைய ஏ.டி.எஸ்.பி., சண்முக பிரியா, நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். தொடர்ந்து வழக்கு நேற்று விசாரணைக்கு, பொங்கலூர் பழனிச்சாமி நீதிமன்றத்தில் ஆஜரானார்.

தொடர்ந்து, சண்முக பிரியாவிடம் குறுக்கு விசாரணைக்கு வரும் 17-க்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Newsletter

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...