பொள்ளாச்சியில் ரூ.9-லட்சம் செலவில் அங்கன்வாடி மைய கட்டிடம் திறப்பு.!!

நடராஜர் மணியார் காலனியில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.9-லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடத்தை முன்னாள் துணை சபாநாயகரும், சட்டமன்ற உறுப்பினருமான பொள்ளாச்சி ஜெயராமன் இன்று திறந்து வைத்தார்.


பொள்ளாச்சி: நடராஜர் மணியார்காலனியில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.9-லட்சம் செலவில் புதிதாகக் கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடத்தை முன்னாள் துணைச் சபாநாயகரும், சட்டமன்ற உறுப்பினருமான பொள்ளாச்சி ஜெயராமன் இன்று திறந்து வைத்தார்.



பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியின் போது, மக்கள் குரலே மகேசன் குரல் என்ற வகையில் மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களுக்குப் பஞ்சாப், அரியானா, உள்ளிட்ட வடமாநில விவசாயிகள் ஒரு ஆண்டுகளாகப் போராட்டம் நடத்தி வந்தனர். விவசாயிகள் குரலுக்கு மதிப்பு அளித்து வேளாண் சட்டங்களை பிரதமர் திரும்பப்பெற்றது ஜனநாயக மாண்பு இதை அதிமுக வரவேற்கிறது.

விவசாயிகளுடைய எண்ணம் என்னவோ அதற்கு ஏற்றாற்போல் தான் கடந்த நான்கரை ஆண்டுக் காலம் எடப்பாடியார் ஆட்சி செய்தார். இந்த சட்டத்தைப் பொறுத்தவரைத் திரும்பப் பெற்றதற்குப் பிரதமர் மோடியைப் பாராட்டுகிறோம் என தெரிவித்தார்.

Newsletter

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...

நான்கு நாட்களில் சிறுவாணி அணையில் நீர்மட்டம் ஏறத்தாழ 2.5 அடி உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஜூலை 28ல் 20.27 அடியிலிருந்த...

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...