மழைக்கால விபத்து மாணவர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்-பள்ளிகளுக்கு சுற்றறிக்கை.!!

மழைக்கால விபத்துகள் ஏற்படாமல் எச்சரிக்கையாகச் செயல்பட்டு, மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என, பள்ளி தலைமை ஆசிரியர்கள், அதிகாரிகளுக்குத் தொடக்கக் கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.


கோவை: மழைக்கால விபத்துகள் ஏற்படாமல் எச்சரிக்கையாகச் செயல்பட்டு, மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என, பள்ளி தலைமை ஆசிரியர்கள், அதிகாரிகளுக்குத் தொடக்கக் கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தொடக்க கல்வி இயக்குனர் அறிவொளி சுற்றறிக்கை:-

தொடர் மழையால் பள்ளிகளின் சுற்றுச்சுவர்கள் ஈரப்பதமாக இருக்கும். எனவே, மாணவர்கள் அருகில் செல்லாமல் தடுக்க வேண்டும். வகுப்பறைகள் பாதித்திருந்தால், அதைப் பயன்படுத்தக் கூடாது. மின் கசிவு பிரச்சினை ஏற்படாமல் இருக்க, மின் இணைப்பைத் துண்டித்து வைக்க வேண்டும்.

பள்ளி வளாகத்தில் நீர், திறந்தவெளி கிணறு, கழிவு நீர்த் தேக்கத் தொட்டிகள் மூடப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும். நீர்நிலைகள் அமைந்துள்ள வழிப்பாதையில், மாணவர்கள் பள்ளிக்கு வருவதை மாற்றி, பாதுகாப்பான பாதையைப் பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும்.

பள்ளி வளாகத்தில் மரங்கள் விழும் நிலையிலிருந்தால் அப்புறப்படுத்த வேண்டும். பள்ளி மேற்கூரைகளில் நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பான அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்ய வேண்டும்.

தேவைப்படும் நிகழ்வுகளில், மாவட்ட ஆட்சியரை அணுகி, மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். பள்ளி திறக்கும் முன் பள்ளி கட்டிட உறுதித் தன்மை மற்றும் வளாகத்தின் பாதுகாப்பை ஆய்வு செய்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...

நான்கு நாட்களில் சிறுவாணி அணையில் நீர்மட்டம் ஏறத்தாழ 2.5 அடி உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஜூலை 28ல் 20.27 அடியிலிருந்த...

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...