கொரோனா, ஜிகா, டெங்கு தடுப்பு நடவடிக்கையாக கேரளா செல்லும் பேருந்துகளுக்குக் கிருமி நாசினி தெளிப்பு.!!

கொரோனா, ஜிகா, டெங்கு உள்ளிட்ட நோய்த்தொற்றுகள் பரவுவதைத் தடுக்க உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து கேரளா செல்லும் பேருந்துகளுக்கு மாநகராட்சி ஊழியர்களால் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.


கோவை: கொரோனா, ஜிகா, டெங்கு உள்ளிட்ட நோய்த்தொற்றுகள் பரவுவதைத் தடுக்க உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து கேரளா செல்லும் பேருந்துகளுக்கு மாநகராட்சி ஊழியர்களால் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இப்பணி தொடர்ந்து நடைபெறும் என மாநகராட்சி அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் கொரோனா, ஜிகா, டெங்கு உள்ளிட்ட நோய்த் தொற்றுகள் பரவுவதைத் தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி கமிஷனர் ஆகியோர் உத்தரவின் பேரில் மாநகர பகுதியில் மாநகராட்சி ஊழியர்களும், புறநகர்ப் பகுதியில் சுகாதாரத்துறை ஊழியர்களும் இந்த நோய்த் தொற்று தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறார்கள்.

இதனிடையே உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து கேரளா செல்லும் பேருந்துகளுக்கு நோய்த் தொற்றுகள் பரவாமல் இருக்கக் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. பேருந்துகளின் டயர், இருக்கைகள் மற்றும் பேருந்துகள் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, கைப்பிடிகளிலும் கிருமி நாசினி மூலம் துடைக்கப்பட்டது.

கோவை உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து கேரளாவிற்கு 25-க்கும் மேற்பட்ட பேருந்துகள் செல்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘கோவையிலிருந்து கேரளா செல்லும் பேருந்துகளுக்குக் கிருமி நாசினி தெளிக்கும் பணி தொடர்ந்து நடைபெறும். நோய்த் தொற்றுகளின் தாக்கம் குறைந்து இல்லை என்கிற நிலை வரும் வரை இப்பணிகள் தொடர்ந்து நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றார்.

Newsletter

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...

நான்கு நாட்களில் சிறுவாணி அணையில் நீர்மட்டம் ஏறத்தாழ 2.5 அடி உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஜூலை 28ல் 20.27 அடியிலிருந்த...

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...