கட்சிக்கு களங்கம் ஏற்படுத்திய தந்தை, மகன் அதிமுகவில் இருந்து நீக்கம்: ஓபிஎஸ்-இபிஎஸ் அறிக்கை..!

பொள்ளாச்சியில் செயின் பறிப்பில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகி மற்றும் கட்சிக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்த அவரது தந்தை ஆகியோர் அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதாக அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது.


கோவை: பொள்ளாச்சியில் செயின் பறிப்பில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகி மற்றும் கட்சிக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்த அவரது தந்தை ஆகியோர் அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதாக அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது.

பொள்ளாச்சி கரிகால அம்மன் வீதியைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி(71). இவர் கடந்த நவம்பர் 2ஆம் தேதி வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த தம்பதிகள் இருவர் முகவரி கேட்பது போல், மூதாட்டியிடம் இருந்து தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பி ஓடினர்.

இதுகுறித்து கிழக்கு காவல்நிலையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வந்த நிலையில், கடந்த 7ஆம் தேதி போலீசார் நடத்திய வாகன தணிக்கையில் நகை பறிப்பில் ஈடுபட்ட தம்பதிகள் இருவர் பிடிபட்டனர்.



விசாரணையில், இருவரும் பொள்ளாச்சி நாச்சிமுத்து கவுண்டர் வீதியைச் சேர்ந்த அஜய் மற்றும் அவரது மனைவி சுருதி என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.



கைது செய்யப்பட்ட அஜய் அதிமுக நகர 5 வது வார்டு தகவல் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர் என்பதும், அவரது தந்தை தண்டபாணி அதிமுக நகர எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் என்பதும் தெரியவந்த நிலையில், இன்று பொள்ளாச்சி நகர எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் தண்டபாணி மற்றும் பொள்ளாச்சி நகர 5வது வார்டு தகவல் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர் அஜய் ஆகியோர் கட்சி கட்டுப்பாட்டு விதிகளை மீறி கட்சியின் பெயருக்கு களங்கம் உண்டாக்கும் வகையில் நடந்துகொண்டதால் கட்சியின் அனைத்து பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து இருவரும் நீக்கப்படுவதாக, அதிமுக ஒருங்கிணைப்பாளர், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

Newsletter

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...

நான்கு நாட்களில் சிறுவாணி அணையில் நீர்மட்டம் ஏறத்தாழ 2.5 அடி உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஜூலை 28ல் 20.27 அடியிலிருந்த...

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...