ஸ்மார்ட் சிட்டி என்பதைவிட நீட்சிட்டி என்பதே எங்களுக்குத் தேவை-முதலமைச்சருக்கு சிட்டிசன் வாய்ஸ் கடிதம்.!!

ஸ்மார்ட் சிட்டி என்பதைவிட நீட்சிட்டி என்பதே எங்களுக்குத் தேவை. ஏரிகள் மற்றும் குளங்களைப் பராமரித்தல் தொடர்பாக, முதலமைச்சருக்கு சிட்டிசன் வாய்ஸ் கடிதம் எழுதியுள்ளனர்.



கோவை: ஏரிகள் மற்றும் குளங்களைப் பராமரித்தல் தொடர்பாக, முதலமைச்சருக்கு சிட்டிசன் வாய்ஸ் கடிதம் எழுதியுள்ளனர்.

இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் ஜெயராமன், செயலாளர் சண்முகம் ஆகியோர் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் குறிப்பாக ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் கோவை போன்ற மாநகரங்களில் பொதுப்பணித்துறை இதுவரை மேற்கொண்டு வந்த குளம், ஏரி குட்டைகளை பராமரிப்பதற்கான பொறுப்பைக் கோயம்புத்தூர் மாநகராட்சி எடுத்துக் கொண்டார்கள் என்பதை விட பொதுப்பணித்துறையிடமிருந்து பறித்துக் கொண்டார்கள் என்றால் மிகையாகாது.

பொதுப்பணித்துறை தான் தொன்று தொட்டு இதுபோன்ற நீர்நிலை ஆதாரங்களை பாதுகாப்பதில் திறமை பெற்றவர்கள். இச்செயல்களில் திறமை பெற்ற அவர்களால் தான் நல்ல முறையில் செயல்படமுடியும். அவர்களுக்கு இது ஒரு பெரிய பணி, பாலங்கள் மற்றும் அணைகள் கட்டுவது, அரசு கட்டிடங்களைப் பராமரிப்பது.

அப்படி இருக்கும் போது இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நிதி பட்ஜெட் கூடுதலாக இருக்குமென்று மாநகராட்சி இந்த முடிவைச் சென்ற ஆட்சியில் எடுத்திருக்கலாம். இந்த ஏரி குளம் திட்டத்தில் அலங்காரம் மற்றும் ஒளி பணிகளை மட்டும் மாநகராட்சி எடுத்திருக்கலாம்.

கோயம்புத்தூரில் உள்ள ஒட்டுமொத்த குளங்களின் பொறுப்பையும் மாநகராட்சி எடுத்துக்கொண்டு செயல்பட்டுள்ளது. ஏற்கனவே மாநகராட்சி வீதிகளைச் சுத்தம் சுகாதாரமாக வைத்திருக்கவில்லை, அதை கேட்டால் ஆள்பலம் இல்லை என்கிறார்கள். குடிநீர் வசதியைத் தனியாரிடம் கொடுத்துவிட்டார்கள்.

குப்பைகள் மற்றும் தெரு விளக்குகளை பராமரிக்க இயலவில்லை. தெரு விளக்கு பராமரிப்பைத் தனியாரிடம் தாரை வார்த்து கொடுத்துவிட்டார்கள். பார்க்கிங், பொது கழிப்பறை தனியாரிடம். வீட்டு வரி வங்கிகள் மூலம்; குடிநீர்சூயஸ் மூலம். இப்படி இருக்கும் போது அவர்களுக்குச் சம்பந்தமே இல்லாத குளம் குட்டைகளை சரிசெய்யும் பணியை எடுத்திருக்கிறார்கள். அவர்களால் வரி வசூல், சரியாகச் செய்யமுடியவில்லை.

சமீபத்தில் உயர்நீதி மன்றத்தில் RTI மூலம் வரி பாக்கிங் பட்டியிலில் கொடுத்ததை உள்ளாட்சித் துறை ஒப்புக்கொண்டது. இதில் வேடிக்கை என்னவென்றால் அரசு துறைகள் பலரிடமிருந்து வரி வசூலிக்காமல் கோடிக்கணக்கில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

குப்பைகளை அகற்ற லாரிகளை பராமரிப்பது, திடக்கழிவு மேலாண்மை போன்ற எதையும் மாநகராட்சியால் மக்களின் எதிர்பார்ப்புக்கு ஈடு செய்ய முடியவில்லை. அப்படி இருக்கும்போது இதை ஏன் மாநகராட்சிக்குக் கொடுத்தார்கள் என்பது எல்லாருக்குமே புரியாதஒரு மில்லியன் டாலர் கேள்வி.

இது ஒருபுறம் இருக்க, சமீபத்தில் கோயம்புத்தூரில் உள்ள வாலாங்குளம், பெரிய குளம், குறிச்சி குளம்போன்ற பெரிய குளங்களில் தண்ணீர் நிரம்பி வழியும்போது அதை மதகுகளில் திறந்து விடாமல் சாலைகளிலேயே வழிய விடுகிறார்கள். ஏற்கனவே ராமநாதபுரம் திருச்சி ரோடு பாலம் கட்டுவதனால் மிகவும் குண்டும் குழியால் பாதிப்படைந்துள்ளது.

கிட்டத்தட்ட நான்கு நாட்களாகப் பெய்த மழையில் தண்ணீர் இன்றும் சாலைகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. அதில் ஆழ்துளை மற்றும் வடிகால் துளை உள்ளதால் யாரேனும் சாலையில் செல்லும் போது பாதசாரிகள் தவறாக வெள்ளத்தில் விழுந்தால் அரசு அவர்களுக்கு ஒரு லட்சம் இழப்பீடு தந்துவிடலாம். இதில் UDS பணி வேறு, ஆங்காகவே நடைபெற்று வருட கணக்கில் வருகின்றது.

ஆனால் அவருடைய உயிரிழப்புக்கு அக்குடும்பத்திற்கும் யார் பொறுப்பு? இந்நிலையில் சிங்காநல்லூர் குளத்திற்குப் போக வேண்டிய தண்ணீர் கூட மீன் பிடிக்க வழியில்லாமல், தண்ணீர் செல்ல இயலாமல் போகிறது. சிங்காநல்லூரையும் வெள்ளலூரையும் இனைக்கக்கூடிய ஏரிமேடு என்ற சாலை கூட அவர்களால் அகலப்படுத்தி, வழியிட முடியவில்லை.

இதெல்லாம் பார்க்கும்போது இந்த அரசாங்கம் மக்களுக்காகச் செயல்படக்கூடிய நல்ல அரசாங்கமென்று பெயர் எடுத்துக் கொண்டு இருக்கும் நேரத்திலே, நம்முடைய முதலமைச்சர், தலைமைச் செயலாளர் மூன்று மாதங்களுக்கு முன்பே குளங்களைச் சுத்தம் செய்ய வேண்டும், கால்வாய்களைத் தூர்வார வேண்டும், கழிவுநீர்களை நீக்கம் செய்யவேண்டும் என்று சொல்லியிருந்தார்.

இது தவிர நிறைய இடங்களில் கழிவுநீர் பொங்கிவழிகிறது. அதற்குக் காரணம் குப்பைகளை முறையாகச் சுத்தம் செய்வதில்லை. இக் கழிவுநீர் வெளியே வருவதனால் அனைவரின் உடல்நலத்தையும் ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. இவை அனைத்திற்கும் காரணம் குளங்களை பராமரிப்பது, நீர்நிலை தேக்கங்களைப் பராமரிப்பது ஆகியவை பொதுப்பணித் துறையிடம் இல்லாமலிருப்பதே. எனவே இதனை பொதுப்பணித் துறையிடம் கொடுத்து அலங்கார வேலைகளை மாநகராட்சியிடம் கொடுத்தால் சிறப்பாக செயலாற்ற முடியும்.

ஆகவே முதல்வர் கொடுக்கும் திட்டங்களைச் செயல்படுத்தத் தலைமைச் செயலாளரும் பொதுப்பணித்துறையும் சேர்ந்து செயல்பட்டு இதற்கு ஒரு தீர்வு கொண்டுவர வேண்டும்.

ஸ்மார்ட் சிட்டி என்பதைவிட நீட்சிட்டி என்பதே எங்களுக்குத் தேவை. ஏனென்றால் குப்பைகளும் மனிதக் கழிவுகளும் எங்கெங்கோ சென்று சேதாரம் செய்துகொண்டிருக்கின்றன. UDS இன்னும் முடிக்கவில்லை. இத்தனை வேலைகளும் ஆங்காங்கே செய்துவிட்டு கண்ணுக்கு தெரிகிற இடத்தில் எல்லாம் ஒரு பாலத்தைக் கட்டி அதற்கு ஒரு ரசீதைப் போட்டுமக்கள்வரி பணத்தை சுரண்டிக் கொண்டிருக்கிறார்கள்.

இதற்கு உடனே முதலமைச்சர் ஒரு தனிக்குழு அமைத்து பொதுப்பணித்துறையும் மாநகராட்சியும் அல்லது நகராட்சியுடன் PWD சேர்ந்து ஆய்வு செய்துசிறப்புக் குழு அமைத்து முடிவு எடுக்கவேண்டும் என பொது நோக்குடன் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு கோவை சிட்டிசன் வாய்ஸ் அமைப்பின் தலைவர் ஜெராமன், செயலாளர் சண்முகம் ஆகியோர் கடிதத்தில் கூறியுள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...