விக்ரம் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கோவையில் தொடக்கம்.!!

கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தின் அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு கோவையில் துவங்கியிருக்கிறது. இங்கு ஒரு மாதம் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற உள்ளது. இதோடு படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் முடிந்துவிடும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.


கோவை: விக்ரம் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு கோவையில் தொடங்கியது

விஜய் நடித்த மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் தற்போது கமல்ஹாசன் தயாரித்து, நடித்து வரும் விக்ரம் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம் உள்படப் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.



கடந்த ஜூலை மாதம் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட நிலையில் இதுவரை மூன்று கட்ட படப்பிடிப்புகள் நடைபெற்றுள்ளன. கூடிய சீக்கிரமே விக்ரம் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தொடங்கப்போவதாக லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் முதல் விக்ரம் படத்தின் நான்காம் கட்ட படப்பிடிப்பு கோவையில் தொடங்கி இருக்கிறது. இதில், கமல்ஹாசன், ஃபகத் ஃபாசில், விஜய் சேதுபதி காட்சிகள் படமாக்கப்படவுள்ளன. விக்ரம் படம் ஜனவரி 14 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கோவையில் ஒரு மாதம் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற உள்ளது. இதோடு விக்ரம் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் முடிந்துவிடும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

Newsletter

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...

நான்கு நாட்களில் சிறுவாணி அணையில் நீர்மட்டம் ஏறத்தாழ 2.5 அடி உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஜூலை 28ல் 20.27 அடியிலிருந்த...

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...