கோவையில் அரசு கல்லூரி பேராசிரியர் மீது பாலியல் புகார்.. வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டம்.!!

கோவை அரசு கலை கல்லூரியில் மாணவிகளிடம் பாலியல் ரீதியாகத் தவறாகப் பேசி வந்த பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கல்லூரி மாணவ, மாணவியர் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: கோவை அரசு கலை கல்லூரியில் மாணவிகளிடம் பாலியல் ரீதியாகத் தவறாகப் பேசி வந்த பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கல்லூரி மாணவ, மாணவியர் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை அரசு கலைக் கல்லூரியில் உள்ள பேராசிரியர் ஒருவர், பாலியல் ரீதியாக மாணவிகளிடம் பேசி வருவதாகக் கல்லூரி நிர்வாகத்திடம் பாதிக்கப்பட்ட மாணவிகள் ஆதாரத்துடன் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் நேற்று இந்திய மாணவர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் உரிய ஆதாரங்களுடன் புகார் அளித்தனர்.



இந்நிலையில் இன்று பிற்பகல் அரசு கல்லூரி மாணவ, மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வகுப்புகளைப் புறக்கணித்து, உரிய நடவடிக்கை எடுக்கும் வரை கலைந்து செல்ல மாட்டோம் எனக் கூறி கல்லூரி முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். பேராசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை மட்டும் போதாது எனவும் சட்டரீதியான நடவடிக்கையும் எடுக்கப்பட வேண்டும் எனவும் மாணவர்கள் வலியுறுத்தினர்.



இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய சமரச பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். போராட்டம் காரணமாகக் கல்லூரி வாசலில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

Newsletter

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...