லாரியை பறிமுதல் செய்த காவல்துறையினர் 9 ஆயிரத்து 300 ரூபாய் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
கோவை: கிணத்துக்கடவு அருகே வீரப்பகவுண்டனூரில் அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றிச் சென்ற டிப்பர் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு காவல்நிலைய உதவி ஆய்வாளர் அருள் பிரகாஷ் கிணத்துக்கடவு அருகே உள்ள வீரப்பகவுண்டனூர் காவல்துறை சோதனை சாவடியில் நேற்று இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது, அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனையிட்டதில், அந்த லாரியில் அளவுக்கு அதிகமாக பாரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, லாரியை பறிமுதல் செய்த காவல்துறையினர் 9 ஆயிரத்து 300 ரூபாய் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.