மூன்று வேளாண் சட்டங்கள் வாபஸ்..! பல்லடத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாட்டம்..!

நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடரில் மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றதற்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை நாட்டு மக்களிடம் உரையாற்றியபோது, யாரும் எதிர்பார்க்காத ஒரு அறிவிப்பை வெளியிட்டு விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு மூன்று வேளாண் சட்டங்களையும் வருகின்ற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் திரும்பப் பெறுவதாகவும் அறிவித்திருந்தார்.

மேலும், டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் தங்களது வீடுகளுக்கு திரும்புமாறு வேண்டுகோள் விடுத்தார். இத்தகைய அறிவிப்பு வரும் என யாரும் எதிர்பார்க்காத நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடரில் மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பிரதமர் கூறியுள்ளார்.



இந்நிலையில், இந்த அறிவிப்பை கொண்டாடும் வகையில், இன்று திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே காளிநாதம்பாளையம் கிராமத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி விவசாயிகள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Newsletter

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...

நான்கு நாட்களில் சிறுவாணி அணையில் நீர்மட்டம் ஏறத்தாழ 2.5 அடி உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஜூலை 28ல் 20.27 அடியிலிருந்த...