ஆனைமலை அருகே பரோலில் வந்த ஆயுள் தண்டனை கைதி கொலை மிரட்டல் வழக்கில் கைது..!

அவர் மீது கொலை மிரட்டல் வழக்குப்பதிவு செய்து, பொள்ளாச்சி நடுவர் நீதிமன்றம் ஒன்றில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைக்கும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.


கோவை: ஆனைமலை அருகே பரோலில் வந்த ஆயுள் தண்டனை கைதி, கொலை மிரட்டல் வழக்கில் கைது செய்யப்பட்டார்.

ஆனைமலை அருகே உள்ள சுப்பேகவுண்டன்புதூரை சேர்ந்தவர் பழனிச்சாமி (41). இவர் கடந்த 2002ம் ஆண்டு ஆனைமலையில் நடைபெற்ற கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, இவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், இவர் அவ்வப்போது பரோலில் வீட்டுக்கு வந்து செல்வது வழக்கம். கடந்த 17ம் தேதி 3 நாள் பரோலில் சுப்பேகவுண்டன்புதூரில் உள்ள வீட்டுக்கு வந்த பழனிச்சாமி, நேற்று இவரது உறவினரிடம் சண்டை போட்டதாக கூறி அதே பகுதியை சேர்ந்த கருப்புசாமி(40) என்பவரை தொலைபேசியில் அழைத்து கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதனால், கருப்புசாமி ஆனைமலை காவல் நிலையத்தில் கொடுத்த புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், நேற்று சுப்பேகவுண்டன்புதூர் வீட்டிலிருந்த பழனிச்சாமி கைது செய்து, அவர் மீது கொலை மிரட்டல் வழக்குப்பதிவு செய்து, பொள்ளாச்சி நடுவர் நீதிமன்றம் ஒன்றில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைக்கும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Newsletter

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...