கோவையில் மாணவிகளிடம் இரட்டை அர்த்தத்தில் பேசிய பேராசிரியர்.!! ஆட்சியரிடம் புகார்.!!

கோவை கலை கல்லூரி பேராசிரியர் மாணவிகளிடம் இரட்டை அர்த்ததில் வாட்ஸ் அப்பில் பேசிய ஸ்கிரின் ஷாட்டுகளை மாணவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியுள்ளனர். உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் தெரிவித்துள்ளனர்.



கோவை: கோவை கலை கல்லூரி பேராசிரியர் மாணவிகளிடம் இரட்டை அர்த்ததில் வாட்ஸ் அப்பில் பேசிய ஸ்கிரின் ஷாட்டுகளை மாணவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியுள்ளனர். உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் தெரிவித்துள்ளனர்.



கோவை கலைக் கல்லூரி பேராசிரியர் என்பவர் மீது கல்லூரி மாணவிகள் பாலியல் புகார் அளித்துள்ளனர். மாணவிகளிடம் தவறான முறையில் நடப்பதாகவும், பாலியல் ரீதியாக இரட்டை அர்த்தத்தில் சாட் செய்வதாகவும் புகார் அளித்துள்ளனர்.



மேலும், பேராசிரியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திய மாணவர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனுவை இன்று அளித்தனர்.

பாதிக்கப்பட்ட அரசு கல்லூரி மாணவிகள் கடந்த சனிக்கிழமை புகார் அளித்தும் அரசு கல்லூரி முதல்வர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மாணவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

மாணவிகளிடம் இரட்டை அர்த்தத்தில் வாட்ஸ் அப்பில் பேசிய ஸ்கிரின் ஷாட்டுகளை கல்லூரி முதல்வரிடம் கொடுத்துள்ள மாணவர்கள் மாவட்ட ஆட்சியரிடமும் வழங்கியுள்ளனர்.



உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் இந்திய மாணவர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...

நான்கு நாட்களில் சிறுவாணி அணையில் நீர்மட்டம் ஏறத்தாழ 2.5 அடி உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஜூலை 28ல் 20.27 அடியிலிருந்த...

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...