திருப்பூரில் ஸ்ரீ அன்னபூர்ணா உணவகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை.!!

வரி ஏய்ப்பு நடித்துள்ளதாக திருப்பூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஸ்ரீ அன்னபூர்ணா உணவகங்களில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு உணவகங்களிலும் 5-முதல் 6-பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.


திருப்பூர்: வரி ஏய்ப்பு நடித்துள்ளதாகத் திருப்பூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஸ்ரீ அன்னபூர்ணா உணவகங்களில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.



திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் ரயில் நிலையம் எதிரே ஸ்ரீ அன்னபூர்ணா உணவகம் செயல்பட்டு வருகிறது. இதன் கிளைகள் திருப்பூர் லட்சுமி நகர் பகுதி மற்றும் அவிநாசியில் கொச்சி-சேலம் தேசிய நெடுஞ்சாலை பகுதியிலும் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஸ்ரீ அன்னபூர்ணா உணவகத்தில் வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்குப் புகார் கிடைத்துள்ளது.



இதனடிப்படையில் இன்று திருப்பூர் மாவட்டத்தில் ரயில் நிலையம், லட்சுமி நகர் பகுதி மற்றும் அவிநாசியில் உள்ள கொச்சி சேலம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் செயல்பட்டுவரும் உணவகம் என மூன்று இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின்போது உணவகங்கள் வெளிப்புறமாக மூடப்பட்டது. வாடிக்கையாளர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. ஒவ்வொரு உணவகங்களிலும் 5-முதல் 6-பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

உணவகத்தின் கணக்கு வழக்குகள் குறித்தும் வங்கி பண பரிமாற்றம் குறித்தும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Newsletter

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...

நான்கு நாட்களில் சிறுவாணி அணையில் நீர்மட்டம் ஏறத்தாழ 2.5 அடி உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஜூலை 28ல் 20.27 அடியிலிருந்த...

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...