நீலகிரியில் கொட்டி தீர்த்த கனமழை: முட்டைக்கோஸ், பீட்ரூட் நீரில் மூழ்கின

கனமழையால் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்தது. மேலும், அறுவடைக்குத் தயார் நிலையிலிருந்த பீட்ரூட் மற்றும் முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.


நீலகிரி: நீலகிரியில் பெய்த கனமழையால் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்தது. முட்டைக்கோஸ், பீட்ரூட் நீரில் மூழ்கின.



மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை மிகத் தீவிரமாகப் பெய்து வரும் நிலையில் நேற்று இரவு முதல் காலை வரை கன மழை பெய்தது. உதகை நகரில் 9.8 செ.மீட்டர் மழை கொட்டி தீர்த்தது.



இதனால் உதகை காந்தல் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை நீர் புகுந்தது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே மற்றும் உதகை நகரில் பல பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டதால் ஜந்து வீடுகள் அந்தரத்தில் தொங்கின.



நேற்றிரவு கொட்டி தீர்த்த கனமழையால் அறுவடைக்குத் தயார் நிலையிலிருந்த பீட்ரூட் மற்றும் முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளை உதகை சட்டப் பேரவை உறுப்பினர் கணேஷ், உள்ளிட்ட அரசு அதிகாரிகளுடன் சென்று பாதிக்கப்பட்ட வீடுகளை நேரில் ஆய்வு மேற்கொண்டு, மழை நீர் குடியிருப்புக்குள் வருவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து மாவட்டத்தில் மழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...

நான்கு நாட்களில் சிறுவாணி அணையில் நீர்மட்டம் ஏறத்தாழ 2.5 அடி உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஜூலை 28ல் 20.27 அடியிலிருந்த...

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...