வால்பாறை பேருந்து நிலையத்தில் முதியவர் உயிரிழப்பு.!!

வால்பாறை காந்திசிலை பேருந்து நிலையத்தில் முதியவர் உயிரிழந்ததையடுத்து, சமூக சேவை செய்துவரும் ஜெயன் தலைமையில், அவருடைய சொந்த செலவிலேயே நல்லடக்கத்திற்குத் தேவையான பொருட்களை பெற்று அவருடைய குழு மயானத்தில் நல்லடக்கம் செய்தனர்.


கோவை: வால்பாறை காந்திசிலை பேருந்து நிலையத்தில் முதியவர் உயிரிழந்ததையடுத்து, சமூக சேவை செய்துவரும் ஜெயன் தலைமையில், அவருடைய சொந்த செலவிலேயே நல்லடக்கத்திற்குத் தேவையான பொருட்களைப் பெற்று அவருடைய குழு மயானத்தில் நல்லடக்கம் செய்தனர்.

கோவை மாவட்டம் வால்பாறை காந்திசிலை பேருந்து நிலையத்தில் சோலையாறு எஸ்டேட்டை சேர்ந்த வயதான முதியவர் உயிரிழந்த நிலையிலிருந்துள்ளார். காலை 8 மணி ஆகியும் அந்தப் பேருந்து நிலையத்தில் படுத்த நிலையிலிருந்ததை கண்டு அங்குள்ள பொதுமக்கள் வால்பாறை காவல் நிலையம் மற்றும் நகராட்சி தெரிவித்தனர்.

இந்நிலையில் இவர் சோலையாறு எஸ்டேட் முதல் பிரிவில் கடந்த 30 ஆண்டு காலங்கள் தேயிலைத் தோட்டத் தொழிலாளியாக பணியாற்றி உள்ளார். இவர் சோலையாறு எஸ்டேட் சேர்ந்த பழனியம்மாள் என்பவருடைய தகப்பனார் பெருமாள் (வயது 90).

இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக வீட்டில் மகள் மற்றும் உறவினர்களுடன் சண்டை போட்டுக்கொண்டு வால்பாறை பகுதியில் காந்தி சிலை பேருந்து நிலைய வாசியாக இருந்துள்ளார்.

இந்த நிலையில் இன்று அவர் இறந்ததை கண்டு தினந்தோறும் அவருக்கு உணவளித்து ஆதரவு தந்த அப்பகுதியில் உள்ள நடைபாதை வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் மிகுந்த வேதனை அடைந்தனர்.

இந்நிலையில் வால்பாறை காவல் நிலையத்திற்குத் தெரிவிக்கப்பட்டு வால்பாறை காவல் நிலையத்திலிருந்து சோலையார் எஸ்டேட்டில் உள்ள அவருடைய மகள் பழனியம்மாளை தொடர்புகொண்டு தகவல் தெரிவித்து உடனடியாக வரவழைக்கப்பட்டு பெருமாளுடைய மகள் மற்றும் அக்கா உறவினர்கள் அனைவரிடமும் பிரேதத்தை உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.

அதன்பின்னர் வால்பாறை பகுதிகளில் சமூக சேவை செய்துவரும் ஜெயன் தலைமையில், அவருடைய சொந்த செலவிலேயே நல்லடக்கத்திற்குத் தேவையான பொருட்களைப் பெற்று அவருடைய குழு பிரேதத்தை வால்பாறை பகுதியில் உள்ள மயானத்தில் நல்லடக்கம் செய்தனர். இதனால் பொதுமக்கள் சமூக சேவகரைப் பாராட்டினர்.

Newsletter

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...