திருப்பூரில் ஏலச்சீட்டு நடத்தி ஏமாற்றிய பெண் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு.!!

ஏலச்சீட்டு நடத்தி ரூ.1.14-கோடி ஏமாற்றிய பெண் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் இன்று மனு அளித்தனர்.


திருப்பூர்: ஏலச்சீட்டு நடத்தி ரூ.1.14 கோடி ஏமாற்றிய பெண் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் இன்று மனு அளித்தனர்.

திருப்பூர் மாவட்டம் கணபதி பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் அதே பகுதியில் பேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த ராதாமணி என்பவர் கடந்த சில வருடங்களாக ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார்.

இதையடுத்து, சதீஷ் குமாரையும் ஏலச்சீட்டில் சேருமாறு வற்புறுத்தியுள்ளார். ஒரே ஏரியாவைச் சேர்ந்தவர் என்பதால் அவரை நம்பி சதீஷ்குமார் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என பலர் அவரிடம் சீட்டுக்குப் பணம் கட்டியுள்ளனர்.

இதையடுத்து, கட்டிய பணத்தைத் திரும்பக் கேட்கும் பொழுது காலதாமதம் செய்துள்ளார். மேலும் கேட்டதற்கு அவர் வெளியே ஒரு ஆட்களுக்குப் பணத்தைக் கொடுத்ததாகவும் அவர் திருப்பி தர மறுத்ததாகவும் இவர்களிடம் தெரிவித்துள்ளனர்.

மேலும் பொறுமை இழந்து இவர்கள் போய் கேட்டதற்கு பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதிர்ச்சியடைந்த பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறையினரிடம் எடுத்துக் கூறி ஏமாற்றியதை தெரிவித்தனர்.



ஆனாலும் பல்லடம் காவல் துறையினர் எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். விரைவில் ராதாமணி ஏமாற்றிய ரூ.1,14,20,000 மீட்டுத்தருமாறு தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...

நான்கு நாட்களில் சிறுவாணி அணையில் நீர்மட்டம் ஏறத்தாழ 2.5 அடி உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஜூலை 28ல் 20.27 அடியிலிருந்த...

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...