கோவையில் சீல் வைக்கப்பட்ட செங்கல் சூளை விவகாரம்: சமூக நீதி கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு.!!

நீதிமன்ற உத்தரவை மீறி சீல் வைக்கப்பட்ட செங்கல் சூளைகளிலிருந்து செங்கல் மற்றும் இயந்திரங்கள் அப்புறப்படுத்தி விற்பதாகக் குற்றச்சாட்டு தெரிவித்து, சமூக நீதி கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



கோவை: நீதிமன்ற உத்தரவை மீறி சீல் வைக்கப்பட்ட செங்கல் சூளைகளிலிருந்து செங்கல் மற்றும் இயந்திரங்கள் அப்புறப்படுத்தி விற்பதாகக் குற்றச்சாட்டு தெரிவித்து, சமூக நீதி கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை மாவட்டத்தில் தடாகம் மாங்கரை பகுதியில் அனுமதியின்றி இயங்கி வந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகளுக்குக் கனிம வளத்தை கொள்ளையடிப்பதாகத் தொடரப்பட்ட வழக்கினால் உயர் நீதிமன்றம் தடை விதித்து சீல் வைத்துள்ளது.

இந்நிலையில் அப்பகுதியில் சீல் வைக்கப்பட்டுள்ள சில செங்கல் சூளைகளிலிருந்து இரவோடு இரவாகச் செங்கல் மற்றும் சூளைகளில் உள்ள இயந்திரங்களை அப்புறப்படுத்தி உரிமையாளர் வெளி மாவட்டத்திற்கு விற்று வருவதாகவும், இதனால் செங்கல் சூளைகள் இயங்கி வந்த தடயங்கள் அழிக்கப்படுவதாகவும், எனவே மாவட்ட நிர்வாகம் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கூறி சமூக நீதி கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இதுகுறித்து கணேஷ் கூறியதாவது:-

தடாகம் பள்ளத்தாக்கு பகுதியில் அனுமதியின்றி செயல்பட்ட செங்கல் தொழிற்சாலைகளுக்குச் சீல் வைக்க உயர் நீதிமன்ற உத்தரவு பிறப்பித்ததன் பேரில் கோவை வடக்கு வட்டாட்சியர் 177 செங்கல் தொழிற்சாலைகளைச் சீல் வைத்து அங்குள்ள இயந்திரங்கள், பச்சை செங்கற்கள், ஜெனரேட்டர், கனரக வாகனங்கள் உள்ளிட்டவற்றைக் கையகப்படுத்தி மூடி முத்திரையிட வேண்டும் என்றும் வடக்கு கோட்டாட்சியர் அந்த உரிமையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க ஆணை பிறக்கப்பட்டு, கனிமவளத்துறை மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், தடாகம் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள செங்கல் தொழிற்சாலைகளிலிருந்து இரவு பகலாக செங்கற்கள் கடத்தப்பட்டு வெளி சந்தைகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும் 27க்கும் மேற்பட்ட செங்கல் தொழிற்சாலைகள் இயந்திரங்கள், அதி நவீன ரோபோக்களை அகற்றி பழனி ஆகிய பகுதிகளுக்கு விற்று வருவதாகத் தெரிவித்தார். இது போன்று விதி மீறிச் செயல்படுபவர்கள் மீது மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டுமெனத் தெரிவித்தார்.

இது போன்று செயல்களில் ஈடுபடுவோர் மீது வடக்கு வட்டாட்சியர், காவல்துறையினர், கனிமவளத்துறையினர், காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...