மழையால் சாலையில் மண் சரிவு ஏற்பட்டு திடீர் பள்ளம் ஏற்பட்டது. அவ்வழியாக வந்த பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் வாகனங்கள் அவ்வழியாகச் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.
கோவை: வால்பாறையிலிருந்து பொள்ளாச்சி செல்லும் சாலையில் ஆழியாறு வனத்துறை சோதனைச் சாவடி அருகே சாலையின் நடுவே திடீர் இரண்டு பள்ளம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்றிரவு கனமழை பெய்தது. இந்த கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சோலையாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
வால்பாறையிலிருந்து பொள்ளாச்சி செல்லும் சாலையில் ஆழியாறு வனத்துறை சோதனைச் சாவடி அருகே சாலையின் நடுவே திடீர் இரண்டு பள்ளம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.மழையால் சாலையில் மண் சரிவு ஏற்பட்டு திடீர் பள்ளம் ஏற்பட்டு ஏற்பட்டது.
அவ்வழியாக வந்த பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பொள்ளாச்சியிலிருந்து வால்பாறைக்கும், வால்பாறையிலிருந்து பொள்ளாச்சி செல்லும் வாகனங்கள் அவ்வழியாகச் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.
இரண்டு சக்கர வாகனங்கள் மட்டும் செல்ல முடிகிறது. இதனால் கனரக வாகனங்கள் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. சரி செய்த பின் கனரக வாகனங்கள் செல்லக் கூடும் என்று தெரிவித்துள்ளனர்.
பொள்ளாச்சியிலிருந்து வால்பாறைக்கு வரும் பேருந்தில் பயணிகளை வால்பாறையிலிருந்து வரும் பேருந்து சாலையில் நிறுத்தி பேருந்தைப் பயணிகளைத் தாமதிக்காமல் வாகனத்தின் மூலம் மாற்றப்பட்டு பேருந்து இயக்கப்பட்டு வருகின்றன.
திடீர் பள்ளம் ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத் துறையினர் பள்ளத்தைச் சரி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
3-மணி நேரத்தில் தார்சாலை சீரமைக்கப்பட்டு காலை 11 மணி அளவில் மீண்டும் போக்குவரத்து தொடங்கப்பட்டது. தொடர் மழையால் மலைப்பாதைகள் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக செல்ல வேண்டும் என்று வனத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.