உடுமலையிலிருந்து பொள்ளாச்சி- பழனி சாலையில் வழிப்பறியில் ஈடுபட்டு காரில் தப்பிய வாலிபரை போலீசார் சினிமா பாணியில் வாகனத்தில் வேகமாகச் சென்று மடக்கி பிடித்தது பரபரப்பாக பேசப்படுகிறது.
பொள்ளாச்சி: உடுமலையிலிருந்து பொள்ளாச்சி பழனி சாலையில் வழிப்பறியில் ஈடுபட்டு காரில் தப்பிய வாலிபரை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.
உடுமலை தளி பகுதியில் மாமரத்து பட்டிதென் குமாரபாளையத்தைச் சேர்ந்த தங்கராஜ் இவரிடம் நேற்று சென்ற வாலிபர்கள் மிரட்டி அவர் வைத்திருந்த நான்கு சக்கர வாகனம் மாருதி கார் மற்றும் அவர் அணிந்திருந்த 3 பவுன் தங்க செயினை பறித்துக்கொண்டுசென்றுள்ளனர்.
இதையடுத்து தங்கராஜ் தளி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் கட்டுப்பாடு அறைக்கு வாலிபர்கள் தப்பிச் செல்வதாகத் தகவல் அளித்தனர்.
கோவை மாவட்ட கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில் பொள்ளாச்சி துணை கண்காணிப்பாளர் தமிழ்மணி அறிவுறுத்தலின் படி ஹைவே பேட்ரோல் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
பொள்ளாச்சி திப்பம்பட்டி பகுதியில் போலீசார் வாகன சோதனையில், ஈடுபட்ட பொழுது மாருதி கார் ஒன்று நிற்காமல் வேகமாகச் சென்றது.

போலீசார் சினிமா பாணியில் மாருதி காரை பின்தொடர்ந்து சின்னம்பாளையம் பகுதியில் காரை மடக்கி பிடித்தனர்.

போலீசார் விசாரணையில் தங்கராஜ் இடம் கார் மற்றும் 3-பவுன் பறித்த ராபின், அருள்ராஜ், சேவாக், மாரியப்பன் என விசாரணையில் தெரியவந்தது. கார் மற்றும் நகை பறிமுதல் செய்த போலீசார் தளி காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்ததன் பேரில் போலீசார் 4-பேரை அழைத்துச் சென்று வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பொள்ளாச்சி பகுதியில் போலீசார் சினிமா பாணியில் வாகனத்தில் வேகமாகச் சென்று மடக்கி பிடித்தது பரபரப்பாக பேசப்படுகிறது.