திருப்பூரில் 44 வயது நபர் ஒருவருக்கு பன்றிக்காய்ச்சல் உறுதி - பொதுமக்கள் அதிர்ச்சி..!

இதன் காரணமாக திருப்பூர் மாநகராட்சி சார்பில் நோய்த்தடுப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.


திருப்பூர்: திருப்பூரில் 44 வயது நபர் ஒருவருக்கு பன்றிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த மே மாதத்தில் கோர தாண்டவமாடிய கொரோனா பாதிப்பு தற்போது குறைந்து உள்ளதால் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

இந்நிலையில், திருப்பூர் 15 வேலம்பாளையத்தை சேர்ந்த 44 வயது நபர் ஒருவர் காய்ச்சல் காரணமாக கோவை மருத்துவமனையில் கடந்த 13ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.

பரிசோதனையில் அவருக்கு எச்1 என்1 என்று அழைக்கக் கூடிய பன்றி காய்ச்சல் வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவருடன் தொடர்பில் இருந்த அவரது குடும்பத்தாருக்கும் சோதனை செய்யப்பட்டு உள்ளது. அனைவரும் தனிமைப்படுத்திக் கொள்ள மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.

இது குறித்து திருப்பூர் மாநகராட்சி ஆணையர் கிராந்தி குமார் கூறுகையில், "கடந்த 13ம் தேதி காய்ச்சலுக்கு சிகிச்சை பெறச் சென்ற ஒருவருக்கு எச்1.என்1 உறுதி செய்யப்பட்டதை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் அனைவரும் சுகாதாரமாக இருப்பதுடன் எங்கு சென்றாலும் மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும்" என்றார்.

கொரோனா பரவல் கட்டுக்குள் இருக்கும் நிலையில், மற்றுமொரு சோதனையாக பன்றிக்காய்ச்சல் பரவுவது திருப்பூர் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...

நான்கு நாட்களில் சிறுவாணி அணையில் நீர்மட்டம் ஏறத்தாழ 2.5 அடி உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஜூலை 28ல் 20.27 அடியிலிருந்த...

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...