புகாரின் பேரில் காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: கோவை பவர் ஹவுஸ் சாலையில் உள்ள ஏ.டி.எம் மையத்தில் இருந்த பேட்டரிகள் திருட்டு போன சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை பவர் ஹவுஸ் சாலையில் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கிக்குச் சொந்தமான ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு பேட்டரி திருடு போனதாக அங்கு பணியில் இருந்த செக்யூரிட்டி புகார் அளித்தார்.
இதையடுத்து, ஏ.டி.எம் மையத்தின் காண்ட்ராக்டர் ஆன சதீஷ் என்பவர் அங்கு நேரில் சென்றார். அங்கு தொடர்ந்து ஆய்வு செய்தபொழுது ஏ.டி.எம் மையத்தின் உள் பகுதியில் வைக்கப்பட்டிருந்த மேலும் 4 பேட்டரிகள் திருடு போயிருப்பது தெரிய வந்தது.
இதனையடுத்து, சதீஷ் கோவை காட்டூர் காவல் நிலையத்தில் பேட்டரிகள் திருட்டு போனதாக புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.