கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் பட்டியல் தயாரிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு..!

கொரோனா தடுப்பூசி போடத் தகுதியான நபர்களில் 73 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், இரண்டாம் தவணை தடுப்பூசி 35 சதவீதம் நபர்களுக்கும் செலுத்தப்பட்டுள்ளது.


கோவை: கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் பட்டியல் தயாரிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடத் தகுதியான நபர்களில் 73 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இரண்டாம் தவணை தடுப்பூசி 35 சதவீதம் நபர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், தகுதிவாய்ந்த அனைவருக்கும் விரைவில் தடுப்பூசி கிடைத்திடும் வகையில், வாரம்தோறும் ஒரு சிறப்பு தடுப்பூசி முகாமுக்கு பதிலாக இரண்டு சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்த அரசு உத்தேசித்துள்ளது.

மேலும், இதுவரை கொரோனா தடுப்பூசி போடாத மக்களின் பட்டியல், தெரு வாரியாகவும், வார்டு வாரியாகவும், ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி வாரியாகவும் தயாரிக்க, மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சிறப்பு தடுப்பூசி தற்காலிக முகாம்கள் மற்றும் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டு, வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமை என இரண்டு நாட்களில் சிறப்பு முகாம்கள், தனியார் தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் ஆகியோரையும், அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து நடத்தப்படும்.

திங்கள் தவிர இதர நாட்களில், அரசு மருத்துவ நிலையங்களில், தொடர்ந்து தடுப்பூசி செலுத்தப்படும். இது குறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு உரிய வழிகாட்டி நெறிமுறைகள் வழங்க இன்று தலைமைச் செயலர் இறையன்பு தலைமையில், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக கூட்டம் நடக்க உள்ளது.

Newsletter

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...

நான்கு நாட்களில் சிறுவாணி அணையில் நீர்மட்டம் ஏறத்தாழ 2.5 அடி உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஜூலை 28ல் 20.27 அடியிலிருந்த...

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...