கோவையில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரண தொகை மற்றும் மாற்று வீடு வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் மனு..!

கெம்பட்டி காலனியில் வசித்து வரும் நாகேந்திரன், பிரியா தம்பதிகளுக்கு நிவாரண தொகை மற்றும் மாற்று வீடு வழங்க கோரி மனு அளித்தார்.


கோவை: கோவையில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரண தொகை மற்றும் மாற்று வீடு வழங்க கோரி மாவட்ட ஆட்சியருக்கு பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் மனு அளித்தார்.

கோவை மாவட்டம் தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 84 வார்டு கெம்பட்டி காலனி, உப்புமண்டி பின்புறம் வசித்து வரும் நாகேந்திரன், பிரியா இவர்களின் இரண்டரை வயது ஆண் குழந்தை கிரண் கடந்த நவம்பர் 13ம் தேதியன்று இரவு பெய்த மழையில் இவர்கள் குடியிருந்த வீட்டின் சுவர் இடிந்து இவர்கள் மீது விழுந்து மூவரும் படுகாயம் அடைந்தனர். பின்னர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இது குறித்து, மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கூறியதாவது;

வீட்டின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் நேற்றிரவு குழந்தை கிரண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது என்ற செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்ததாகவும், அந்த குழந்தையை இழந்து வாடும் குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்தார்.

மேலும், உயிரிழந்த குழந்தையின் குடும்பத்திற்கும், படுகாயம் அடைந்த தாய், தந்தையருக்கும் தமிழக அரசின் அதிகபட்ச நிவாரண தொகையை உடனடியாக வழங்கிட ஆவண செய்து, அவர்களுக்கு குடிசை மாற்று வாரியத்தின் மூலமாக வீடு ஒதுக்கித் தருமாறும் அந்த மனுவில் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...