பழங்குடியின மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்க பொள்ளாச்சி சார் ஆட்சியர் உத்தரவின் பேரில் இந்த சிறப்பு முகாம் நடைபெற்றது.
கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் ஆதிவாசி பழங்குடி மக்களுக்கு சிறப்பு முகாம் நடைபெற்றது.
கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார வனப்பகுதியில் சுமார் 8 ஆதிவாசி பழங்குடியின கிராமங்கள் உள்ளன. இங்கு சுமார் 1500 மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், இவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்க பொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞான தேவ் ராய் உத்தரவின் பேரில், சிறப்பு முகாம் வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த முகாமில் அடர்ந்த வனப் பகுதியில் உள்ள கூமாட்டி செட்டில்மெண்ட் ஆதிவாசி பழங்குடியினர் கிராமத்தில் உள்ளவர்கள் பங்குபெற்று 40 பேர்களுக்கு முதியோர் உதவித்தொகை, ஜாதி சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, பழங்குடியினர் நல வாரிய அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வங்கிக் கணக்கு துவங்க சிறப்பு ஏற்பாடு மற்றும் வருவாய்த் துறை சார்ந்த அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது.

இம்முகாமில் வால்பாறை வட்டாட்சியர் குமார் மற்றும் ஆனைமலை துணை வட்டாட்சியர் வாசுதேவன், துணை வட்டாட்சியர் முத்துக்குமார், வருவாய் ஆய்வாளர் தங்கரத்தினம், சேத்துமடை கிராம நிர்வாக அலுவலர் செல்வம், தனி வருவாய் ஆய்வாளர் கார்த்திகேயன், ஆனைமலை வருவாய் வட்டாட்சியர் பானுமதி, தனி வட்டாட்சியர் முருகேசன், வட்ட வழங்கல் அலுவலர் முருகராஜ் மற்றும் வால்பாறை கிராம நிர்வாக அதிகாரி விஜய அமிர்தராஜ் ஆகியோர் பங்குபெற்று ஆதிவாசி பழங்குடி மக்களுக்குத் தேவையான சான்றிதழ்களை சிறப்பு முகாம் நடத்தி வழங்கினர்.

இந்த முகாமில் ஆதிவாசி பழங்குடியின மக்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் பயன்பெற்றனர்.