குடியிருப்பு பகுதியில் கழிவு நீர் தொடர்ந்து வெளியேறி வருவதால் நாளுக்கு நாள் நிலைமை மோசமாக மாறி வருகிறது. அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. உடனடியாக பிரச்சினைக்குத் தீர்வு காண பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கோவை: குடியிருப்பு பகுதியில் கழிவு நீர் தொடர்ந்து வெளியேறி வருவதால் நாளுக்கு நாள் நிலைமை மோசமாக மாறி வருகிறது. அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. உடனடியாக பிரச்சினைக்குத் தீர்வு காண பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் 32-வது வார்டுக்குட்பட்ட சேரன்மாநகர் அருகே ராமாத்தாள் லே-அவுட், ஆசிரியர் காலனி உள்ளிட்ட பல குடியிருப்பு பகுதிகள் உள்ளன. இங்கு ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர்.

கடந்த வாரம் பெய்த கன மழை தொடர்ந்து கழிவுநீர் கால்வாய் உடைப்பு ஏற்பட்டுக் கடந்த 6- நாட்களாகக் குடியிருப்பு பகுதிகளில் கழிவுநீர் குளம்போல் தேங்கி உள்ளன.

24 மணி நேரமும் தொடர்ந்து கழிவுநீர் வெளியேறி வருவதால் சுற்றுப்புறக் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள வீடுகளில் கழிவுநீர் குளம் போல் தேங்கி உள்ளன.

தவிர அதிக கழிவு நீர் ஒரே இடத்தில் தேங்கி உள்ள காரணத்தால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சி அதிகாரிகளிடம் பல முறை புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

ராமாத்தாள் லே-அவுட் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த லட்சுமணன், ராஜேஷ் உள்ளிட்டோர் கூறியதாவது, "கடந்த வாரம் பெய்த தொடர் மழை காரணமாக எங்கள் குடியிருப்பு பகுதிகளில் அதிக அளவில் மழை நீர் தேங்கியது.
முதலில் மழை நீர் என்று நினைத்தோம், ஆனால் கழிவுநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டுக் குடியிருப்பு பகுதிகள் முழுவதும் சூழ்ந்து உள்ளது. கழிவுநீர் என்பது துர்நாற்றம் வீசத் தொடங்கிய பின்புதான் தெரிய வந்தது.
தொடர்ந்து கழிவுநீர் வெளியேறிக் கொண்டே வருகிறது. இதன் காரணமாகச் சுற்றுப்புறக் குடியிருப்பு பகுதிகளில் வெளிப்புறங்களில் மட்டும் குளம்போல் கழிவுநீர் தேங்கியுள்ளது மட்டுமின்றி குடியிருப்பு பகுதிகளிலும் கழிவுநீர் தேங்கி உள்ளன.
கழிவுநீர் தொடர்ந்து வெளியேறி வருவதால் நாளுக்கு நாள் நிலைமை மிகவும் மோசமாக மாறி வருகிறது. மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக பிரச்சினைக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்."
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.