கொச்சின்-கோவை பைபாஸ் சாலை, மரப்பாலம் சந்திப்பு அருகே சென்ற அரசு பேருந்து கழிவுநீர் கால்வாயில் சிக்கியது. அதில் அதிர்ஷ்டவசமாகப் பயணிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
கோவை: கொச்சின்-கோவை பைபாஸ் சாலை, மரப்பாலம் சந்திப்பு அருகே சென்ற அரசு பேருந்து கழிவுநீர் கால்வாயில் சிக்கியது.
கேரளா - கோவை அரசு பேருந்து கோவை மரப்பாலம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது பஸ் அதிவேகத்தின் காரணமாக திடீரென நிலைதடுமாறி சாலை ஓரத்தில் மழை காரணமாகத் தேங்கியிருந்த கழிவுநீர் கால்வாய்கள் இறங்கியது. அதில் அதிர்ஷ்டவசமாகப் பயணிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
கொச்சின்-கோவை பைபாஸ் சாலையில் மரப்பாலம் சந்திப்பு சர்வீஸ் ரோட்டில் சென்ற அரசு பேருந்தின் முன் சக்கரம் எதிர்பாராதவிதமாகக் கழிவுநீர் பாதையில் இறங்கியது.
பேருந்தில் சென்றவர்களுக்குப் பாதிப்பு இல்லை. மழை காலத்தில் கழிவுநீர் பாதையில் மண் மூடி இருந்ததாலும், அருகில் குழாய் பதிக்கும் பணி நடைபெறுவதாலும் இந்த சம்பவம் நடந்ததாக அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.