கோவையில் புதிய பொலிவுடன் ஸ்ரீ அன்னபூர்ணா உணவகம் துவக்கம்!

ஆர்.எஸ்.புரத்தில் புதிய பொலிவுடன் ஸ்ரீ அன்னபூர்ணா உடன் புதிதாக ஐகான் ஹோட்டல் மற்றும் கோவ் உணவகம் துவங்கப்பட்டுள்ளது.



கோவை: ஆர்.எஸ்.புரத்தில் புதிய பொலிவுடன் ஸ்ரீ அன்னபூர்ணா உடன் புதிதாக ஐகான் ஹோட்டல் மற்றும் கோவ் உணவகம் துவங்கப்பட்டுள்ளது.



புதுப்பிக்கப்பட்டு துவங்கப்பட்டுள்ள 50000-சதுரடி கொண்ட இந்த ஹோட்டல் கட்டிடத்தில் 3 சிறப்பு வசதிகள் உள்ளன. அதில் "அன்னபூர்ணாவின் ஐகான்"-ல் 52 சொகுசு அறைகளும், 120 இருக்கைகள் வசதியுடன் கோவ் சிறப்பு உணவகமும், வழக்கமான உணவு பட்டியலின் படி இயங்கும் ஸ்ரீ அன்னபூர்ணா உணவகமும் உள்ளது.

கோவ் என்பது ஒரு பலவகை சைவ உணவகம், முன்பதிவு செய்யும் விருந்தினர்களுக்காக சமைத்து வழங்கப்படும் பகுதியாக இருக்கும். அன்னபூர்ணாவில் ஐகான், இரண்டு வகை அறைகளைக் கொண்டது. எக்ஸிக்யுட்டிவ் மற்றும் சூட். இதில், 3 அரங்குகள், வணிகச் சந்திப்பு நிகழ்வுகள் மற்றும் விழாக்கள் நடத்த வசதியாகவும், பார் வசதியும் உருவாக்கப்பட்டுள்ளது.



கோவை மாவட்டத்தின் பொறியியல் மற்றும் ஜவுளி துறைக்கு அர்ப்பணிக்கும் வகையில், இதன் உள்ளரங்க அலங்காரம், தாமிர தகடுகள் மற்றும் சிறப்பு துணிகளை கொண்டு வித்தியசாமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டிடத்தில் புகழ் பெற்ற தொழிலதிபர் ஏ.வி வரதராஜன் துவக்கி வைத்தார்.



ஜிஆர்ஜி டிரஸ்ட் நிறுவனர் அறங்காவலர் நந்தினி ரங்கசாமி குத்து விளக்கு ஏற்றி வைத்தார்.



சங்கரா மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் ஆர்.வி.ரமணி முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.

பிரிக்கால் நிறுவனத்தின் தலைவர் விஜய்மோகன் கோவ் - சிறப்பு உணவகத்தை துவக்கி வைத்தார். பண்ணாரி அம்மன் குழுமத்தின் தலைவர் எஸ்.வி. பாலசுப்ரமணியம் ஐகானை துவக்கி வைத்தார்.



சக்தி குழுமத்தின் தலைவர் மாணிக்கம் மகாலிங்கம், நர்மதா ஏசி அறையை துவக்கி வைத்தார். சுமங்கலி ஜூவல்லர்ஸ் நிர்வாக இயக்குனர் விஸ்வநாதன், இனிப்புகள் பிரிவின் முதலாவது விற்பனையை துவக்கி வைத்தார்.

அன்னபூர்ணா தலைவர் கே.ராமசாமி, துணைத் தலைவர் டி.சுந்தர்ராஜன், நிர்வாக இயக்குனர் டி.ஸ்ரீனிவாசன், இணை இயக்குனர் ஆர்.வெங்கடேஷ், செயல் இயக்குனர்கள் ஜெகன் எஸ் தாமோதரசாமி, ஆர். கார்த்திகேயன், விவேக் ஸ்ரீனிவாசன் மற்றும் அன்னபூர்ணா பணியாளர்கள் துவக்க விழாவில் பங்கேற்றனர்.

Newsletter

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...

நான்கு நாட்களில் சிறுவாணி அணையில் நீர்மட்டம் ஏறத்தாழ 2.5 அடி உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஜூலை 28ல் 20.27 அடியிலிருந்த...

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...