கோவை பஞ்சமுக ஈஸ்வர ஆலயத்தில் கும்பாபிஷேக விழா!

கோவை ஸ்ரீ ஆனந்த வேதாஸ்ரம வளாகத்தில் உள்ள பஞ்சமுக ஈஸ்வர ஆலயத்தின் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக விழாவையொட்டி முதல் கால, இரண்டாம் மற்றும் மூன்றாம் கால வேள்வி பூஜைகள் நடைபெற்றது.


கோவை: கோவை ஸ்ரீ ஆனந்த வேதாஸ்ரம வளாகத்தில் உள்ள பஞ்சமுக ஈஸ்வர ஆலயத்தின் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

கோவை மாவட்டத்தில் தமிழக கேரள எல்லையான புதுப்பதி மலை கிராமத்தில் உள்ள மலை அடிவாரத்தில் அழகிய இயற்கை எழில் சூழலுடன் அமைந்துள்ள ஆனந்தா கோசாலை பஞ்சமுக வேதாஷ்ரம ஆலய வளாகத்தில் புதிதாக பணியப்பெற்ற ஈஸ்வர ஆலயத்தின் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.



முன்னதாக விழாவையொட்டி முதல் கால, இரண்டாம் மற்றும் மூன்றாம் கால வேள்வி பூஜைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து கோவை காமாட்சிபுரி ஆதினம் ஞான குரு சாக்தஸ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள் தலைமையில், கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவனுக்கு பூஜைகள் செய்து, பின்னர் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது.

தொடர்ந்து, மகாதரிசனம் நடைபெற்று பக்தர்கள் அனைவருக்கும் தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் மகா அபிஷேகம், அலங்கார பூஜையுடன், பத்து வித அலங்கார தரிசனம் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ ஆனந்தா கோசாலை பிரம்மரிஷி ஈஸ்வரன் குருஜி செய்திருந்தார்.

விழாவில், முக்கிய விருந்தினர்கள் ஜன்தி லால், அசோக் மேத்தா, முன்னால் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை சண்முகம் உட்பட மதுக்கரை, மாவுத்தம்பதி, நவக்கரை, புதுப்பதி உட்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பகத்ரகள் என பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...

நான்கு நாட்களில் சிறுவாணி அணையில் நீர்மட்டம் ஏறத்தாழ 2.5 அடி உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஜூலை 28ல் 20.27 அடியிலிருந்த...

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...