கோவையில் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம்; ஆசிரியர் மற்றும் பள்ளி முதல்வரை காவலில் எடுத்து விசாரிக்க திட்டம்..!

கைது செய்யப்பட்ட 2 நபர்களும் உடனடியாக நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த காரணத்தினால் மாணவிக்கு பள்ளியில் வேறு யாராவது பாலியல் தொந்தரவு கொடுத்தனரா? என்று விசாரித்து வருகின்றனர்.


கோவை: கோவையில் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், ஆசிரியர் மற்றும் முதல்வர்களிடம் முழு விசாரணை நடத்த வேண்டி இருப்பதால் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க தீவிரம் காட்டி வருவதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கோவையில் கடந்த 11ம் தேதி மாலையில் உக்கடம் பகுதியில் வசித்து வந்த பிளஸ் டூ மாணவி பொன் தாரணி பள்ளி ஆசிரியரின் தொடர் பாலியல் தொந்தரவால், கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் விஸ்வரூபம் எடுத்தது.

இதையடுத்து, அனைத்து தரப்பட்ட மக்கள், மாணவ மாணவிகள், சமூக சேவை அமைப்பு, மாதர் சங்கம் என பல்வேறு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத்தொடர்ந்து, 12ம் தேதி இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதை தொடர்ந்து, நேற்று காலை பெங்களூருவில் பதுங்கியிருந்த பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து, மாணவியின் பெற்றோர்கள் உடலைப் பெற்று இறுதிச்சடங்கை நிறைவேற்றினர்.

இந்நிலையில், நேற்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாணவியின் வீட்டிற்கு நேரில் சென்று பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினார்.

இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியபோது:-

தமிழக அரசும், காவல் துறையும், குற்றவாளிகளை தப்ப விடமாட்டோம். கடுமையான தண்டனை பெற்றுத் தருவோம் என உறுதியளித்தார்.

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட 2 நபர்களும் உடனடியாக நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த காரணத்தினால் மாணவிக்கு பள்ளியில் வேறு யாராவது பாலியல் தொந்தரவு கொடுத்தனரா? ஆசிரியர் மற்றும் முதல்வர்களிடம் முழு விசாரணை நடத்த வேண்டி இருப்பதால் இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் தீவிரம் காட்டி வருவதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

Newsletter

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...

நான்கு நாட்களில் சிறுவாணி அணையில் நீர்மட்டம் ஏறத்தாழ 2.5 அடி உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஜூலை 28ல் 20.27 அடியிலிருந்த...

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...