திருப்பூரில் விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் இரண்டு பேர் பலி!

பல்லடம் சாலை கொத்துக்காடு தோட்டம் பகுதியில் தொழிலாளர்கள் இரண்டு பேர் சாய ஆலை கழிவு தேக்கத் தொட்டியை சுத்தம் செய்து கொண்டிருந்த போது விஷவாயு தாக்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



திருப்பூர்: சாய ஆலை கழிவு தேக்கத் தொட்டியைச் சுத்தம் செய்ய இறங்கிய 2-தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், 3-பேர் மருத்துவமனையில் அனுமதி.

திருப்பூர் பல்லடம் சாலை வித்யாலயம் அருகே உள்ள கொத்துக்காடு தோட்டம் பகுதியில் உள்ள பேன்டோன் டையர்ஸ் என்ற சார் ஆலையில் ராமகிருஷ்ணன், வடிவேல், நாகராஜ், என்ற 3-பேர் சாய ஆலை கழிவு தேக்கத் தொட்டியைச்சுத்தம் செய்யும் பணியில் உள்ளே இறங்கி ஈடுபட்டுள்ளனர்.

அப்போது வடிவேலு என்ற நபருக்கு மூச்சு திணறியுள்ளது. உடனே உள்ளே இருந்தவர்கள் சத்தம் போட்டவுடன் வெளியிலிருந்த நிறுவனத்தின் மேலாளர் தினேஷ் என்பவரும், நிறுவனத்தின் எலக்ட்ரிஷியன் ராஜேந்திரன் என்பவரும் காப்பாற்றச் சென்றுள்ளனர்.

இதில், விஷவாயு அதிகமாகத் தாக்கி வடிவேலு என்ற நபரும், காப்பாற்றச் சென்ற மேலாளர் தினேஷ் என்ற நபரும் உயிரிழந்தனர்.



நாகராஜ், ராமகிருஷ்ணன், ராஜேந்திரன் என்கிற 3 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வீரபாண்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Newsletter

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...

நான்கு நாட்களில் சிறுவாணி அணையில் நீர்மட்டம் ஏறத்தாழ 2.5 அடி உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஜூலை 28ல் 20.27 அடியிலிருந்த...

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...