பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு கவியருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு!

பொள்ளாச்சி அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் ஆழியாறு கவி அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.


கோவை :பொள்ளாச்சி அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் ஆழியாறு கவி அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.



கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள வால்பாறை,கவர்க்கல் மற்றும் சக்தி எஸ்டேட் போன்ற நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் ஆழியாறு அருகே உள்ள குரங்கு அருவி எனப்படும் கவியருவிக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துக் காணப்படுகிறது.

இந்நிலையில் நேற்று இரவு முதல் பெய்த மழையால் ஆழியாறு கவி அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பக வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கவி அருவியில் வெள்ளப்பெருக்கு தண்ணீரானது ஆர்ப்பரித்துக் கொட்டுவதால் சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதிக் குளிக்க வனத்துறையினர் தடை செய்துள்ளனர்.

மேலும் இன்று ஞாயிற்றுக்கிழமை பொது விடுமுறை என்பதால் பல்வேறு மாவட்டம் மற்றும் மாநிலங்களிலிருந்து வந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அருவிக்குச் செல்லாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

அதேபோல் தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதாலும் அருவியில் வெள்ளப்பெருக்கு தொடர்ந்து நீடிப்பதாலும் சுற்றுலாப் பயணிகள் ஆழியாறு. கவியருவி வருவதைத் தவிர்க்க வேண்டுமெனவும் மேலும் வால்பாறை சாலை கொண்டை ஊசி மலைச்சாலைகளில் மண் சரிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் சாலைகளில் ஆங்காங்கே நிற்க வேண்டாம் எனவும் சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறையினர் எச்சரித்து பொள்ளாச்சி வனச்சரகர் புகழேந்தி தலைமையில் வேட்டை தடுப்பு காவலர்கள் முழுநேர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...

நான்கு நாட்களில் சிறுவாணி அணையில் நீர்மட்டம் ஏறத்தாழ 2.5 அடி உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஜூலை 28ல் 20.27 அடியிலிருந்த...

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...