கோவை-பொள்ளாச்சி இடையே மீண்டும் ரயில்கள் இயக்கம்!

17-மாதங்களுக்குப் பிறகு கோவை - பொள்ளாச்சி இடையே இன்று முதல் முன்பதிவில்லா விரைவு ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


கோவை: 17-மாதங்களுக்குப் பிறகு கோவை - பொள்ளாச்சி இடையே இன்று முதல் முன்பதிவில்லா விரைவு ரயில் சேவை தொடங்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கோவை-பொள்ளாச்சி இடையே இன்று முதல் ரயில் இயக்கப்பட்டுள்ளதாகச் சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. கோவை போத்தனூர் - பொள்ளாச்சி ரயில் வழித்தடத்தில் மின் மயமாக்கும் பணிகள் முடிவடைந்த நிலையில், ரயில்வே அதிகாரிகள் கடந்த மாதம் கோவை போத்தனூர் - பொள்ளாச்சி இடையே ரயில் என்ஜினை இயக்கி சோதனை ஓட்டம் மேற்கொண்டனர்.

இந்நிலையில், பயணிகளின் கோரிக்கையை ஏற்று கோவையிலிருந்து போத்தனூர், கிணத்துக்கடவு வழியாக பொள்ளாச்சிக்கு இன்று முதல் ரயில் சேவை இயக்கப்படுவதாகச் சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கோவையிலிருந்து பொள்ளாச்சிக்கு இன்று முதல் இயக்கப்படும் முன் பதிவில்லா விரைவு ரயில் கோவையிலிருந்து மாலை 6.15 க்கு புறப்பட்டு இரவு 7.45 மணிக்கு பொள்ளாச்சி வந்து அடையும் எனவும் சனிக்கிழமைகளில் மட்டும் இந்த ரயில் இயக்கப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சியிலிருந்து நாளை முதல் காலை 7.25 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லா விரைவு ரயில் காலை 8.40 மணி அளவில் கோவை சென்றடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ரயில் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படாது.17 மாதங்களுக்குப் பிறகு கோவை பொள்ளாச்சி இடையே ரயில் சேவை தொடங்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Newsletter

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...

நான்கு நாட்களில் சிறுவாணி அணையில் நீர்மட்டம் ஏறத்தாழ 2.5 அடி உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஜூலை 28ல் 20.27 அடியிலிருந்த...

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...