காரமடையில் சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது!

காரமடையில் 10-ஆம் வகுப்பு மாணவியை கடத்தி திருமணம் செய்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக கேரள இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.


கோவை: காரமடையில் 10-ஆம் வகுப்பு மாணவியை கடத்தி திருமணம் செய்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக கேரள இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை மாவட்டம் காரமடையை அடுத்துள்ள வெள்ளியங்காடு பகுதியைச் சேர்ந்தவர் 10-ஆம் வகுப்பு மாணவி. பள்ளி மாணவி தொடர் விடுமுறை காரணமாகக் கேரள மாநிலம் மன்னார்காடு பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார்.

பின்னர், வீடு திரும்பவில்லை. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

போலீசாரின் தீவிர விசாரணையில் மாணவி கேரளாவில் தனது பாட்டி வீட்டிற்குச் சென்ற பொழுது அருகிலிருந்த இளைஞர் லோகேஷ் குமார் (வயது 21) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர், செல்போன் மூலம் தங்களது காதலை வளர்த்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 9-ஆம் தேதி கேரளத்தில் உள்ள தனது பாட்டி வீட்டிற்குச் சென்ற மாணவியை இளைஞர் லோகேஷ் குமார் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி கடத்திச்சென்று அன்னூர் விண்ணப்பள்ளியில் உள்ள தனது உறவினர் இல்லத்தில் தங்க வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

காவல் துறையினரின் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...

நான்கு நாட்களில் சிறுவாணி அணையில் நீர்மட்டம் ஏறத்தாழ 2.5 அடி உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஜூலை 28ல் 20.27 அடியிலிருந்த...

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...