வால்பாறையில் குடியிருப்பு பகுதிகளை சேதப்படுத்திய காட்டுயானைகள்!

வால்பாறை அருகே காட்டுயானைகள் தோட்டத் தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிகளை உடைத்து சேதப்படுத்தியது. தகவலறிந்து வந்த வனத்துறையினர் அப்பகுதியில் முகாமிட்டு இருந்த ஏழு காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.


கோவை: வால்பாறை அருகே காட்டுயானைகள் தோட்டத் தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிகளை உடைத்து சேதப்படுத்தியது.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. யானைகள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்லும் பொழுது இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதியில் நுழைந்து வீடுகள் நியாயவிலைக்கடைகள் மளிகை கடைகள் போன்றவைகளை உடைத்து உணவு பொருட்களைச் சேதப்படுத்தி வருகிறது.



நேற்றிரவு வால்பாறை சேக்கல்முடிஎஸ்டேட் பகுதியில் நியாய விலை கடையைக்குடியிருப்புகளில் உள்ள மளிகை கடையும் டீக்கடையும் உடைத்து சேதப்படுத்தியது. தகவலறிந்து வந்த வனத்துறையினர் அப்பகுதியில் முகாமிட்டு இருந்த ஏழு காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

யானைகள் நடமாட்டத்தால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். மானாம்பள்ளி வனச்சரக மணிகண்டன் தலைமையில் ஆய்வு மேற்கொண்டு யானைகளின் நடமாட்டத்தைக் கண்டுயானைகள் இரவு நேரத்தில் குடியிருப்புகளில் நுழையாமல் இருக்க பாதுகாப்பு பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...

நான்கு நாட்களில் சிறுவாணி அணையில் நீர்மட்டம் ஏறத்தாழ 2.5 அடி உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஜூலை 28ல் 20.27 அடியிலிருந்த...

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...