கோவையில் இருசக்கர வாகன திருடர்களை துரத்திப்பிடித்த காவல் ஆய்வாளர்!

சூலூர் அருகே பைபாஸ் சாலையில் இருசக்கர வாகன திருடர்களை இரவு ரோந்தின் போது சூலூர் ஆய்வாளர் விரட்டிப் பிடித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.


சூலூர்: சூலூர் அருகே பைபாஸ் சாலையில் இருசக்கர வாகன திருடர்களை இரவு ரோந்தின் போது சூலூர் ஆய்வாளர் விரட்டிப் பிடித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

சூலூர் அருகே நீலம்பூர் பைபாஸ் சாலையில் இருசக்கர வாகனத்தில் திருடர்களை இரவு ரோந்தின் போது சூலூர் ஆய்வாளர் விரட்டிப் பிடித்தார். சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் இருசக்கர வாகனத்தில் உடனே ஓடி விரட்டிப் பிடித்தார் . அவரிடம் இருந்து இரண்டு இருசக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த சம்பவத்தில் ஒருவர் பிடிபட்டார் மற்றொருவர் தப்பியோடினார் அவரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சனிக்கிழமை நள்ளிரவு சூலூர் வட்ட ஆய்வாளர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது நீலம்பூர் எல்என்டி பைபாஸ் சாலையில் சந்தேகத்துக்கிடமான இருவர் நின்று இருப்பது தெரியவந்தது அவர்களிடம் எதற்காக இங்கே நிற்கிறீர்கள் என கேட்டபோது திடீரென ஒரு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர்.

அவர்களை ரோந்து வாகனத்தில் துரத்திச் சென்றபோது முதலிபாளையம் பிரிவு அருகே இருசக்கர வாகன திருடர்கள் வாகனத்தைப் போட்டுவிட்டு சாலையில் தப்பியோட முயற்சி செய்தனர். அப்போது ஆய்வாளர் மாதையன் ரோந்து வாகனத்திலிருந்து இறங்கி இருசக்கர வாகனத்தில் இல்லை சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் ஓடி விரட்டி பிடித்தார்.

கட்டிப் புரண்ட இரு சக்கர வாகன திருடர்களுடன் போராடியதில் அவரது சீருடை கிழிந்தது. இருந்தாலும் விடாமல் இருசக்கர வாகன திருடர்களைப் பிடித்தார். அதனைத் தொடர்ந்து அங்கு வந்த போலீசாரின் உதவியுடன் இருசக்கர வாகனத்தில் அவரே சூலூர் காவல் நிலையத்திற்குக் கொண்டு வந்தார். இந்த சம்பவத்தின்போது தப்பியோடிய மற்றொரு வாகன திருடனைத் தேடி வருகின்றனர்.

போலீசிடம் சிக்கிய தொடரை விசாரித்தபோது அவர் ராமநாதபுரம் மாவட்டம் தங்கப்பா நகரைச் சேர்ந்த பழனியப்பன் மகன் ஹரிஹரசுதன் (23) எனத் தெரியவந்தது இவர் கோவை பகுதியில் கூலி வேலை செய்து வருவதாக கூறினார்.

மேலும், தப்பியோடிய அவர் சென்னையைச் சேர்ந்த சங்கர் என தெரியவந்தது. இவர்கள் இருவரும் கோவை லட்சுமி பகுதியில் தங்கியிருந்து வந்துள்ளனர். இவர்களிடமிருந்து இரண்டு ஸ்ப்ளெண்டர் பிளஸ் வாகனங்கள் கைப்பற்றப்பட்டது.

தப்பியோடிய இருசக்கர வாகன திருடர்களை துரத்திப் பிடிக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...

நான்கு நாட்களில் சிறுவாணி அணையில் நீர்மட்டம் ஏறத்தாழ 2.5 அடி உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஜூலை 28ல் 20.27 அடியிலிருந்த...

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...