எனது சொந்த மகளுக்கு ஏற்பட்டது போல வலியை தருகிறது.. கோவை மாணவியின் பெற்றோரை சந்தித்த அமைச்சர்கள்!

கோவையில் பாலியல் தொல்லை காரணமாகத் தற்கொலை செய்துகொண்ட 12-ஆம் வகுப்பு மாணவி வீட்டிற்கு வந்த அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் செந்தில் பாலாஜி பெற்றோர்களைச் சந்தித்தனர்.


கோவை: கோவையில் பாலியல் தொல்லை காரணமாகத் தற்கொலை செய்துகொண்ட 12-ஆம் வகுப்பு மாணவி வீட்டிற்கு வந்த அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் செந்தில் பாலாஜி பெற்றோர்களைச் சந்தித்தனர்.

தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் உயிரிழந்த மாணவியின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தோம்.

இது தனிப்பட்ட பெண்ணுக்கு நடந்த நிலைமை என்று பாராமல் எனது சொந்த பெண் குழந்தைக்கு இந்த நிலைமை ஏற்பட்டால் எப்படி இருக்குமோ அந்த நிலையில்தான் நான் இருக்கிறேன்.பள்ளி முதல்வர் மீதும் நடவடிக்கை வேண்டும் என பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

பாரபட்சமின்றி இந்த சம்பவத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். விழிப்புணர்வு என்பதுஅனைவருக்கும் தேவை தனியார்ப் பள்ளி மாணவர்களுக்கும் அது தேவைப்படுகிறது. அதற்கான செயற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

இந்த சம்பவத்தில் இருபத்தி நான்கு மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். வீட்டில் கிடைத்த கடிதம் குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது எனத் தெரிவித்தார்.

Newsletter

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...

நான்கு நாட்களில் சிறுவாணி அணையில் நீர்மட்டம் ஏறத்தாழ 2.5 அடி உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஜூலை 28ல் 20.27 அடியிலிருந்த...

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...