கோவை மாநகராட்சி 24 மணி நேர குடிநீர் திட்ட குழாய்‌ அமைக்கும்‌ பணியில்‌ சாலை சீரமைத்தல்‌ துரிதமாக நடைபெற்று வருவதாக மாநகராட்சி ஆணையர் தகவல்!

இப்பணிகள் விரைவாக முடிக்கப்பட்டு பொதுமக்கள்‌ பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென என மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.


கோவை: கோவை மாநகராட்சி 24 மணி நேர குடிநீர் திட்ட குழாய்‌ அமைக்கும்‌ பணியில்‌ சாலை சீரமைத்தல்‌ மற்றும்‌ வெட்மிக்ஸ்‌ சாலை அமைக்கும்‌ பணிகள்‌ துரிதமாக நடைபெற்று வருவதாக மாநகராட்சி ஆணையர் ராஜ கோபால்‌ சுன்௧ரா இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.

கோவை மாநகராட்சி 24 மணி நேர குடிநீர் திட்டத்தில்‌ சூயஸ்‌ நிறுவனத்தினர்‌ குடிநீர் குழாய்‌ அமைக்கும்‌ பணிகள்‌ கோவை நகரில்‌ பல்வேறு இடங்களில்‌ நடைபெற்றுக்‌ கொண்டுள்ளது. குடிநீர் குழாய்கள்‌ அமைத்த பிறகு, குழாய்‌ பதித்த இடங்களில்‌ (Road Restoration மற்றும்‌ Wet mix) அமைக்கும்‌ பணிகள்‌ தற்போது போர்க்கால அடிப்படையில்‌ நடைபெற்று வருகிறது.



கோவை மாநகராட்சிக்குட்பட்ட சாரமேடு மெயின்‌ ரோடு, மணியகாரன்பாளையம்‌, ராகாச்சி கார்டன்‌ மெயின்‌ ரோடு, தில்லை நகர்‌, குறிஞ்சி கார்டன்‌, பி.ஆர்‌.பி. கார்டன்‌, பாலசுந்தரம்‌ பிரதான சாலை, எம்‌.ஜி.ரோடு, பாரதி நகா்‌, ஜே.கே.கார்டன்‌, ரோஸ்‌ கார்டன்‌, ஏ.கே.எஸ்‌.நகர்‌, பொன்னையராஜபுரம்‌ மெயின்‌ ரோடு, கோபால்‌ லே-அவுட்‌, சொக்கம்புதார்‌ மெயின்‌ ரோடு போன்ற பல்வேறு இடங்களில்‌ கடந்த 06.11.2021 முதல்‌ பணிகள்‌ நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இன்று வரை சுமார்‌ 9200 Length (rm) அளவுக்கு (Road Restoration மற்றும்‌ Wet mix) போடப்பட்டுள்ளது. மேலும்‌, இப்பணிகளை போர்க்கால அடிப்படையில்‌ விரைவாகவும்‌, தரமாகவும்‌ மேற்கொள்ள ஏதுவாக இராட்சத இயந்திரங்கள்‌, ஜே.சி.பி. உள்ளிட்ட பல்வேறு இயந்திரங்கள்‌ மற்றும்‌ 100-க்கும்‌ மேற்பட்ட தொழிலாளர்கள்‌ மற்றும்‌ பொறியாளர்கள்‌ பணியில்‌ ஈடுபட்டுள்ளனர்.

இப்பணிகள்‌ விரைவாக முடிக்கப்பட்டு பொதுமக்கள்‌ பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டுமென என மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா இ.ஆ.ப., அவர்கள்‌ பொறியாளா்களுக்கு உத்தரவிட்டுள்ளார்‌.

Newsletter

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...

நான்கு நாட்களில் சிறுவாணி அணையில் நீர்மட்டம் ஏறத்தாழ 2.5 அடி உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஜூலை 28ல் 20.27 அடியிலிருந்த...

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...