கோவையில் பள்ளி சிறுமியின்‌ தற்கொலைக்கு காரணமான அனைவரையும்‌ போக்சோ சட்டத்தில்‌ கைது செய்ய வேண்டும்‌ - பாமக இளைஞர் சங்க மாநில துணை செயலாளர்..!

அனைத்து பள்ளிகளிலும்‌ மாணவர்களின்‌ பார்வை படக்கூடிய முக்கியமான இடத்தில்‌, போக்சோ சட்டத்தைப்‌ பற்றியும்‌, புகார்‌ அளிக்க - உதவி எண்‌ அடங்கிய பேனரை பள்ளி நிர்வாகம்‌ வைக்க அரசு உத்தரவிட வலியுறுத்தல்.



கோவை: கோவையில் பள்ளி சிறுமியின்‌ தற்கொலைக்கு காரணமான அனைவரையும்‌ போக்சோ சட்டத்தில்‌ கைது செய்ய வேண்டும்‌ என்று பாமக இளைஞர் சங்க மாநில துணை செயலாளர் அசோக் ஸ்ரீநிதி வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கோவையைச்‌ சேர்ந்த 17 வயது பள்ளி மாணவி வியாழக்கிழமை மாலை வீட்டில்‌ யாரும்‌ இல்லாதபோது தனது அறையில்‌ தூக்கிட்டுத்‌ தற்கொலை செய்து கொண்டார்‌ என்ற செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தோம்‌.

போலீஸ்‌ விசாரணையில்‌ சிறுமி படித்த பள்ளியில்‌ வேலை செய்த இயற்பியல்‌ ஆசிரியர்‌ மிதுன்‌ சக்ரவர்த்தி என்பவர் சிறுமிக்கு அளித்த தொடர்‌ பாலியல்‌ தொல்லைகளால்‌ தான்‌ அவர்‌ தற்கொலை செய்து கொண்டார்‌ என்று தெரியவந்துள்ளது.

இதைத்தொடர்ந்து, போக்சோ சட்டத்தின்‌ கீழ்‌ வழக்குப்‌ பதிவு செய்து அவரை கைது செய்து இருப்பது சற்று ஆறுதலை கொடுத்தாலும்‌, இந்த வழக்கில்‌ தொடர்புடைய அனைவரையும்‌ போக்சோ சட்டத்தில்‌ கைது செய்வதே நியாயமாகும்‌.

பாமகவின்‌ இரண்டு கோரிக்கைகள்‌:

1. உடனடியாக சிறுமியின்‌ தற்கொலைக்குக்‌ காரணமான அனைவரையும்‌ போக்சோ சட்டத்தில்‌ கைது செய்ய வேண்டும்‌.

2 அனைத்து பள்ளிகளிலும்‌ மாணவர்களின்‌ பார்வை படக்கூடிய முக்கியமான இடத்தில்‌, போக்சோ சட்டத்தைப்‌ பற்றியும்‌, புகார்‌ அளிக்க - உதவி எண்‌ அடங்கிய பேனரை பள்ளி நிர்வாகம்‌ கட்டாயமாக வைக்க வேண்டும்‌ என்று அரசு உத்தரவிட வேண்டும்‌.

இந்த இரண்டு நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்‌. இல்லையெனில்‌ இளைஞர்களை ஒன்று இரட்டி மாபெரும்‌ போராட்டத்தை பாமக முன்னெடுக்கும்‌.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...

நான்கு நாட்களில் சிறுவாணி அணையில் நீர்மட்டம் ஏறத்தாழ 2.5 அடி உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஜூலை 28ல் 20.27 அடியிலிருந்த...

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...