கோவையில் கூட்டுறவு வங்கிகளில் சிறப்பு கடன் முகாம் வரும் 16ம் தேதியுடன் முடிவு..!

கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கும் போது பள்ளி மாற்றுச் சான்றிதழ் மற்றும் உண்மை சான்றிதழ்களின் நகல்களை சமர்ப்பிக்க வேண்டும்.


கோவை: தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களான தனிநபர் கடன் திட்டம், சுய உதவிக் குழுக்களுக்கான சிறுதொழில் கடன் திட்டம், கல்விக் கடன் திட்டம் ஆகிய திட்டங்களுக்கான கடன் வழங்குவதற்கான சிறப்பு முகாம் கோவை மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் கடந்த 8ம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது.

கோவை மாவட்டத்தில் வசிக்கும் 18 வயது பூர்த்தி அடைந்த 60 வயதுக்கு மேற்படாத சிறுபான்மையினர்களான கிறிஸ்துவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகியோர் இக்கடன் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

மேலும், குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் ஜாதி சான்று, ஆதார்கார்டு, இருப்பிடச்சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விபரம் இதர ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த நிலையில், கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கும் போது பள்ளி மாற்றுச் சான்றிதழ் மற்றும் உண்மை சான்றிதழ்களின் நகல்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும், இந்த சிறப்பு கடன் முகாம் 16ம் தேதியுடன் முடிவடைய உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...

நான்கு நாட்களில் சிறுவாணி அணையில் நீர்மட்டம் ஏறத்தாழ 2.5 அடி உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஜூலை 28ல் 20.27 அடியிலிருந்த...

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...