நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: கோவையில் 2153 வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள திட்டம்..!

கோவை மாநகராட்சிக்கு 1400 வாக்காளருக்கு ஒரு வாக்குச்சாவடி எனவும் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கு 1200 வாக்காளருக்கு ஒரு வாக்குச்சாவடி என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகளில் உள்ளாட்சித் தேர்தலுக்கு மொத்தம் 703 வார்டுகளில் 2153 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.

இந்நிலையில், இந்த வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ள இடங்களில் அடிப்படை வசதிகள் குறித்து அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு நடத்த திட்டமிட்டுள்ளனர்.

கோவை மாநகராட்சிக்கு 1400 வாக்காளருக்கு ஒரு வாக்குச்சாவடி எனவும் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கு 1200 வாக்காளருக்கு ஒரு வாக்குச்சாவடி எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், கோவை மாவட்டத்தில் வாக்குச்சாவடி பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, கோவை மாநகராட்சியில் 100 வார்டுகளில் மொத்தம் 1290 வாக்குச்சாவடிகளும், மேட்டுப்பாளையம் நகராட்சியில் 33 வார்டுகளில் 69 வாக்குச்சாவடிகளும், பொள்ளாச்சி நகராட்சியில் 36 வார்டுகளில் 89 வாக்குச்சாவடிகளும், வால்பாறை நகராட்சியில் 21 வார்டுகளில் 73 வாக்குச்சாவடிகளும், 33 பேரூராட்சிகளில் 513 வார்டுகளில் 632 வாக்குச்சாவடிகளும் என மொத்தம் மாவட்டத்தில் 703 வார்டுகளில் 2153 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.

இது தொடர்பான ஆய்வு கூட்டம் அன்மையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்தின் அடிப்படையில் தேர்தல் பிரிவு அதிகாரிகள் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ள இடங்களில் அடிப்படை வசதிகள் குறித்து விரைவில் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகளான மின்விளக்கு, கழிப்பிடம், குடிநீர் வசதி, கட்டிடத்தின் தரம் உள்ளிட்டவை குறித்து விரைவில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது,’’ என்று தெரிவித்தார்.

Newsletter

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...

நான்கு நாட்களில் சிறுவாணி அணையில் நீர்மட்டம் ஏறத்தாழ 2.5 அடி உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஜூலை 28ல் 20.27 அடியிலிருந்த...

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...