கோவை ஏஜிஎஸ் ஹெல்த் கேர் மையத்தில் சர்க்கரை நோய் விழிப்புணர்வு - புதிய இணையதளம் துவக்கம்..!

www.covaidiabetes.com 2021 என்ற இணையதளம் சாய்பாபா காலனியில் உள்ள ஏஜிஎஸ் ஹெல்த்கேர் மருத்துவமனையில் கோவை மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர். நிர்மலா துவக்கி வைத்தார்.



கோவை: உலக சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு, ஏஜிஎஸ் ஹெல்த்கேர் மையத்தில், புதிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் இணையதளம் துவக்கி வைக்கப்பட்டது.

இது குறித்து ஏஜிஎஸ் ஹெல்த்கேர் இயக்குனர் டாக்டர் ஆதித்யா குகன் கூறுகையில்,

"உலக சர்க்கரை நோய் தினத்தை 1991ம் ஆண்டில் உலக சுகாதார நிறுவனமும், சர்வதேச சர்க்கரை நோய் பவுண்டேஷன் இணைந்து உருவாக்கின.

சர்க்கரை நோயால் ஏற்படும் ஆபத்துக்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், கவனத்தைக் கவரவும் இந்த நாள் உருவானது.

உலக சர்க்கரை நோய் தினம், 2006ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையில் 61/225 வது தீர்மானமாக அங்கீகரிக்கப்பட்டது. இன்சுலினை சர் பெர்டிரிக் பாண்டிங் கண்டுபிடித்த 1922ம் ஆண்டு நவம்பர் 14 ம் தேதியை சர்க்கரை நோய் தினமாக அங்கீகாரம் செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகாரத்துக்குப் பின், 2007ம் ஆண்டில் நீல நிற முத்திரை தயார் செய்யப்பட்டு பிரச்சாரம் தொடங்கியது. ஒவ்வொரு ஆண்டும் உலக சர்க்கரை நோய் தினம், ஒரு குறிப்பிட்ட கருத்தின் அர்ப்பணிப்போடு, ஓரிரு ஆண்டுகளுக்கு நடத்தப்படும்.

நடப்பு 2021 - 23ம் ஆண்டுக்கான கருத்துரு, "சர்க்கரை நோய் கவனிப்பு - இப்போது இல்லாமல் வேறு எப்போது?" என்பதாகும்," என்றார்.

இயக்குனர் டாக்டர் ஆதித்யன் குகன் தலைமையில் இயங்கும் ஏஜிஎஸ் ஹெல்த்கேர் மருத்துவமனையில், சர்க்கரை நோயாளிகளுக்கு மிகுந்த ஆர்வத்துடன் சிகிச்சை தரப்படுகிறது. இங்கு கண்டறியப்படும் இளம் வயது சர்க்கரை நோய் உள்ளவர்களை கண்டறிந்து, அவர்களது குடும்பத்தினரின் பொருளாதாரமும் பாதுகாக்கப்பட்டுள்ளது.

பல லட்சம் இளைஞர்கள் சர்க்கரை நோய் விழிப்புணர்வு பெறும் வகையில், புதிய தளம் ஒன்றை உருவாக்கியுள்ளோம். கலந்துரையாடல் தரும் வகையில் இந்தியாவில் முதல் முறையாக இணையதள பக்கத்தை, இந்த உலக சர்க்கரை நோய் தினத்தில் அர்ப்பணிக்கிறோம்.

இந்த இணையதள பக்கங்கள் சிறப்பம்சங்கள் குறித்து டாக்டர் ஆதித்யன் குகன் கூறுகையில்:

இந்த இணையதள பக்கமானது, அனைத்து கேள்விகளுக்கும் ஒலி வடிவிலான பதில்களை தரும். ( சர்க்கரை நோய் என்றால் என்ன என்பது முதல் அதனால் ஏற்படும் சிக்கல்கள் வரை). மக்கள் மனதில் உள்ள மூட நம்பிக்கை வரை பதில்கள் உள்ளன.

உதாரணமாக, டைப் 1 சர்க்கரை நோய் பற்றி அறிய, முன்னரே பதிவு செய்யப்பட்ட ஒலித்தகவல்கள், ஆங்கிலத்திலும், தமிழிலும் இடம் பெற்றுள்ளன. அதோடு மட்டுமின்றி, தனித்துவமிக்க சமிக்ஞை பட்டன் ஒன்றும் இதில் உள்ளது.

சர்க்கரை அளவு அதிகரித்து, உதவி வேண்டுவோர் இந்த இணையத்தளத்தில் தேட நேர்ந்தால், இந்த SOS சமிக்ஞை பட்டனை அழுத்தினால், அவர்களது இருப்பிடம் அறிந்து, உதவி செய்ய முடியும். அவர்களுக்கு தேவையான கவனிப்பு மற்றும் வழிகாட்டுதல்கள் தரப்படும்.

மேலும், இன்னும் பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த இணையத்தள பக்கம். சர்க்கரை நோயாளிகளுக்குத் தேவையான உணவு முறைகள், அளவீடுகள் மற்றும் இருதயம்/ சர்க்கரை நோயாளிகளுக்கான உணவு முறைகள் பற்றி தரப்பட்டுள்ளன. சர்க்கரை நோயாளிகளின் பாதப் பாதுகாப்பு விளக்கமும் உள்ளது.

ஒவ்வொரு நாளும் இடம் பெறும் செய்திகள், கொங்கு மண்டலத்தில் உள்ள மக்களின் அறிவியல் சார்ந்த விளக்கத்திற்கு பெரிதும் உதவியாக இருக்கும். இதில் இடம் பெற்றுள்ள கணக்கீட்டு அமைப்பு, தனிநபரின் வயது, உடலமைப்புக்கு ஏற்ற வகையில் எவ்வளவு வரை ரிஸ்க் எடுக்க முடியும் என விளக்கப்பட்டுள்ளது. இதில் இடம் பெறும் நடவடிக்கைகள், பல மில்லியன் இளைஞர்களை சென்றடையும். அவர்கள், வேகமான வளர்ச்சி பெற்று வரும் மக்கள் தொகை, உடற்பயிற்சி இல்லாததால் ஏற்படும் பாதிப்பு மற்றும் சர்க்கரை நோய் பற்றி அறிய வாய்ப்பாக அமையும்.

இந்த நாளில், "லேசான உணவுகளை உண்டு, கடினமா உழைத்து, சரியாக துாங்கி, சத்தமில்லாமல் கொல்லும் சர்க்கரை நோய்க்கு முடிவு கட்டுவோம்" என உறுதியேற்போம். இவ்வாறு அவர் பேசினார்.



இணையதள முகவரி:www.covaidiabetes.com 2021 உலக சர்க்கரை நோய் தினத்தில் இந்த இணையதளம் சாய்பாபா காலனியில் உள்ள ஏஜிஎஸ் ஹெல்த்கேர் மருத்துவமனையில் துவக்கி வைக்கப்பட்டது.

Newsletter

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...

நான்கு நாட்களில் சிறுவாணி அணையில் நீர்மட்டம் ஏறத்தாழ 2.5 அடி உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஜூலை 28ல் 20.27 அடியிலிருந்த...

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...