கோவை கிணத்துக்கடவு அருகே தாமரைகுளத்தில் அதிக பாரம் ஏற்றிச் சென்ற லாரி பறிமுதல்..!

லாரியை பறிமுதல் செய்த போலீசார் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.


கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே தாமரைகுளத்தில் அதிக பாரம் ஏற்றிச் சென்ற லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள தாமரைக்குளம் பகுதியில் கிணத்துக்கடவு காவல் நிலைய உதவி ஆய்வாளர் கணேசமூர்த்தி, சிறப்பு உதவி ஆய்வாளர் சேகரன், காவலர் செல்வகுமார் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது, அவ்வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றிச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர், அந்த லாரியை பறிமுதல் செய்த போலீசார், 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

Newsletter

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...

நான்கு நாட்களில் சிறுவாணி அணையில் நீர்மட்டம் ஏறத்தாழ 2.5 அடி உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஜூலை 28ல் 20.27 அடியிலிருந்த...

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...