வனத்துறை அழித்து வரும் உன்னி செடியை கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் வளர்ப்பது சரியா? - கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு கேள்வி!

வாலாங்குளம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கரையில் நடப்பட்டுள்ள செடிகளில் அந்நிய தாவரமான உன்னிச்செடி (Lantena) நடப்பட்டுள்ளது.


கோவை: தமிழக வனத்துறை அழிக்கப் பெரும்பாடுபடும் உன்னி செடியை கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் திட்டத்தின்கீழ் வளர்த்துவது குறித்து குளங்கள் பாதுகாப்பு அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.

இது தொடர்பாக கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

"தமிழக வனத்துறை அழிக்கப் பெரும்பாடுபடும் உன்னி செடியை கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் வளர்ப்பது சரியா..??

தலைகீழ் போர்டுகளும் தவறான பெயர்களும்..!!



கோவை வாலாங்குளம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கரையில் நடப்பட்டுள்ள செடிகளில் அந்நிய தாவரமான உன்னிச்செடி (Lantena) நடப்பட்டுள்ளது.

இத்தாவரம் அதிவேகமாக பரவுவதாலும் மற்ற தாவரங்களை ஆக்கிரமிப்பதாலும் தமிழக வனத்துறையினர் இத்தாவரத்தை அழிக்க பல கோடிகளில் திட்டம் தீட்டி அழிப்பதற்கு பெரும் முயற்சி எடுத்து வருகின்றனர்.

இக்குளக்கரையில் வைத்துள்ள இத்தாவரத்திலிருந்து விதைகள் உபரி நீர் வழியாக ஆற்றங்கரைகள் மற்றும் விவசாய நிலங்களில் அதிகமாக பரவ வாய்ப்புள்ளது. மேலும், பறவைகள் இத்தாவரத்தின் பழங்களை உண்பதாலும் பரவும் அபாயம் உள்ளது.

ஆகவே, இத்தாவரத்தை அகற்றி மாற்றாக நம் நாட்டு மலர்செடிகளை நடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் உக்கடம் - சுங்கம் புறவழிச்சாலையில் இரயில்வே பாலத்துக்குக் கீழ் உள்ள பூங்காவில் நடப்பட்டுள்ள தாவரங்களுக்கு வைக்கப்பட்டுள்ள பெயர்ப்பலகை கைகளில் தவறான பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

உதாரணத்திற்கு நாம் நன்கறிந்த மூங்கில் தாவரத்திற்குப் பதிலாக மருது என பலகை அச்சிட்டு வைத்துள்ளனர். இது போன்று வெண் நொட்சி, காயா, பவளகுறிஞ்சி, இஞ்சி, காட்டு கொஞ்சி, வேல் வாகை, கள்ளி மலர், நீர்க்குளிரி என அச்சிடப்பட்டு வைக்கப்பட்டுள்ள அனைத்தும் வேறு பெயர்கள் கொண்ட தாவரங்களின் மத்தியில் வைக்கப்பட்டுள்ளன.

இங்கு குழந்தைகள், மற்றும் மாணவ மாணவியர்கள் வந்துசெல்லும் இடத்தில் தவறான பெயர்ப்பலகை வைக்கப்பட்டுள்ளது. எனவே தவறான முன்னுதாரணத்தைத் தவிர்க்கக் கேட்டுக்கொள்கிறோம்.

இதயத்தின் ஈரம் கொண்டு…! புவியின் ஈரம் காப்போம்…!

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...

நான்கு நாட்களில் சிறுவாணி அணையில் நீர்மட்டம் ஏறத்தாழ 2.5 அடி உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஜூலை 28ல் 20.27 அடியிலிருந்த...

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...