தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவையில் மல்லிகை கிலோ ரூ.2000-க்கு விற்பனை!

கோவையில் நேற்று மல்லிகை கிலோ ரூ.2-ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டதால், பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். மழையால், பூக்கள் வரத்து குறைந்து பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை அதிகரித்துக் காணப்பட்டது.


கோவை: கோவையில் நேற்று மல்லிகை கிலோ ரூ.2-ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டதால், பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

கோவை பூ மார்க்கெட்டுக்கு கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள், சத்தியமங்கலம், திண்டுக்கல், நிலக்கோட்டை, ஓசூர் மற்றும் ஆந்திர, கார்நாடகா உள்ளிட்ட வெளிமாநில பகுதிகளிலிருந்தும் விற்பனைக்குப் பூக்கள் கொண்டு வரப்படுகின்றன.

இங்கு சிறிய வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வந்து பூக்களை வாங்கி செல்கின்றனர். இந்நிலையில், தமிழகம் முழுவதும் கடந்த 2-வார காலமாகப் பெய்து வரும் மழையால், பூக்கள் வரத்து குறைந்து நேற்று பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை அதிகரித்துக் காணப்பட்டது.

அதன்படி, மல்லிகை நேற்று ரூ.2-ஆயிரத்திற்கு விற்கப்பட்டது. இதேபோல் ஜாதி மற்றும் முல்லை ரூ.1200-வரையும் விற்கப்பட்டது. அரளி கிலோ ரூ.200-க்கும், லில்லி பூ ரூ.200-க்கும், பட்டன் ரோஸ் ரூ.240-க்கும் விற்கப்பட்டது.

செவ்வந்தி பூ நேற்று வரத்து அதிகரிப்பு காரணமாகக் கிலோ ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டன. இதேபோல் 15-பூக்கள் கொண்ட ரோஜா கட்டு ரூ.150-க்கும் விற்பனை செய்யப்பட்டன.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...