கோயம்புத்தூர் மாநகராட்சியில் 2533-நிரந்தர தூய்மைப்பணியாளர்களுக்கு ரூ.19,77,757/- மதிப்பீட்டிலான சீருடைகள் வழங்கும் பணியினை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்.
கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சியில் 2533 நிரந்தர தாய்மைப்பணியாளா்களுக்கு ரூ.19,77,757/- மதிப்பீட்டில் சீருடைகள் வழங்கும் பணியினை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று 01.11.2021 தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜி.எஸ்.சமீரன் தலைமை வகித்தார். பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.சண்முகசுந்தரம், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா ஆகியோர் முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் அவர்கள் பேசியதாவது,
“கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மை மற்றும் சுகாதாரம் பேணும் வகையில், பணிபுரிந்துவரும் அனைத்து நிரந்தர தூய்மைப் பணியாளர்களுக்கு ஆண்டு தோறும் இரண்டு செட் சீருடைகள், காலனி மற்றும் சீருடைகளுக்கான தையற்கூலி ஆகியன வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி 2021-ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முதற்கட்டமாக அரசு துறை நிறுவனத்தின் மூலம் ஒரு செட் சீருடைகள் மொத்தம் ரூ.19,77,757/- மதிப்பிலான ஆண் தூய்மை பணியாளர்கள் 1621 நபர்களுக்கு முழுக்கால் பேண்ட் & அரைக்கை சட்டை ஒன்று, தலைப்பாகை (துண்டு) ஒன்று, தையற்கூலி ரூ.450/-, இதற்கான செலவினம் ரூ.13,03,616/- மற்றும் பெண் தூய்மைப் பணியாளாகள் 912 நபர்களுக்கு, நீல நிற சேலை ஒன்று, ஜாக்கெட், தலைப்பாகை (துண்டு ஒன்று, தையற்கூலி ரூ.150/-, இதற்கான செலவினம் ரூ.6,71,141/- ஆகியன வழங்கப்படுகிறது.
மொத்த பயனாளிகளான ஆண், பெண் தூய்மைப்பணியாளர்களான 2533 நபர்களுக்கு, மொத்த செலவினமாக ரூ.19,77,757/- மதிப்பீட்டில் முழுக்கால் பேண்ட் & அரைக்கை சட்டை ஒன்று, தலைப்பாகை (துண்டு ஒன்று, நீல நிற சேலை ஒன்று, ஜாக்கெட் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படவுள்ளது என மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் தெற்கு மண்டல உதவி ஆணையர் அண்ணாதுரை, மாநகர நல அலுவலர் மரு.சதீஷ்குமார், முதன்மை கல்வி அலுவலர் கீதா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டார்கள்.