கோவையிலிருந்து கேரளத்துக்கு 1 டன் ரேஷன் அரிசியைக் கடத்த முயன்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனர்.
கோவை: கோவையிலிருந்து கேரளத்துக்கு 1 டன் ரேஷன் அரிசியைக் கடத்த முயன்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனர்.
கோவை-பாலக்காடு சாலையில் உள்ள ஈச்சனாரி சோதனை சாவடியில் உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் நேற்று சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அந்த ஆட்டோவில் கேரளத்துக்குக் கடத்திச் செல்லப்பட இருந்த 1-டன் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, போலீஸாா், ஆட்டோ ஓட்டுநரான கேரள மாநிலம், பாலக்காட்டைச் சோ்ந்த அனீஷ் (30) என்பவரைக் கைது செய்து அவரிடம் இருந்து 1,015-கிலோ ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.