திருப்பூரில் நாயை சுட்டுக் கொன்றதாக வதந்தி பரவியதால் பதற்றம் - போலீசார் விசாரணை..!!

விசாரணையில், சாலையை கடக்கும்போது நாய் மீது வாகனம் மோதியதில் நாய் இறந்தது தெரியவந்தது.


திருப்பூர்: திருப்பூரில் நாயை சுட்டுக் கொன்றதாக வதந்தி பரவியதால் சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது.

திருப்பூர் ராயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரியா, இவர் தனது வீட்டில் நாட்டின நாயை வளர்த்து வந்துள்ளார். இதனிடையே, காலை நாயானது சாலையில் சென்று கொண்டிருந்த போது அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் துப்பாக்கியால் நாயை சுட்டுக் கொன்றதாக அப்பகுதியை சேர்ந்த சிலர் கூறியுள்ளனர்.

இதையடுத்து, நாயின் உரிமையாளர் பிரியா சம்பவம் குறித்து வடக்கு போலீசாருக்கு தகவல் கொடுத்ததின் பெயரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, நாயை சோதனை செய்து பார்த்தபோது, துப்பாக்கியால் சுட்டுதற்கு உண்டான அடையாளம் ஏதும் இல்லை.

மேலும், சாலையை கடக்கும்போது நாயை வாகனம் ஏதோ இடித்துச் சென்றதால் நாய் இறந்தது தெரியவந்தது. இது குறித்து வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாயை சுட்டுக் கொன்றதாக வதந்தி பரவியதை தொடர்ந்து அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...