கோவையில் கணவருடன் பைக்கில் சென்ற பெண்ணின் 7 பவுன் தாலிச் செயினை பறித்துச் சென்ற மர்ம கும்பல்..!

இந்த சம்பவத்தின் போது, கீழே விழுந்த தேன்தமிழ்பாரதிக்கு காயம் ஏற்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


கோவை: கோவையில் கணவருடன் பைக்கில் சென்ற பெண்ணின் 7 பவுன் தாலிச் செயினை பறித்துச் சென்ற மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவையில் தொடர்ந்து செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக போலீசார் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பெ.நா.பாளையம் கோவில்பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (58). இவரது மனைவி தேன்தமிழ் பாரதி (52). இருவரும் நேற்று மாலை, வெள்ளமடையில் உள்ள குத்தகை தோட்டத்தில் கீரை பறிக்க இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர்.

இருசக்கர வாகனத்தை கணவர் வெங்கடேசன் ஓட்டி வந்தார். வெள்ளமடை தொட்டிபாளையம் ரோட்டில் வந்து கொண்டிருந்தபோது, பைக்கில் வந்த, 2 நபர்கள் தேன்தமிழ்பாரதியின் கழுத்தில் இருந்த, 7 பவுன் தாலி செயினை பறித்துச் சென்றனர்.

இதில் கீழே விழுந்த தேன்தமிழ்பாரதிக்கு காயம் ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து, பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...