விளாங்குறிச்சி சாலையில் விபத்தில் அடிபட்ட பெண்ணுக்கு உதவுவதாக கூறி 7-பவுன் செயினை திருடி சென்ற மர்ம நபர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: விளாங்குறிச்சி சாலையில் விபத்தில் அடிபட்ட பெண்ணுக்கு உதவுவதாக கூறி 7-பவுன் செயினை திருடி சென்ற மர்ம நபர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிளம்புடி ராமகிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த கருப்பண்ண கவுண்டர் என்பவரின் மகன் சின்னச்சாமி (69). கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் தனது மனைவியுடன் வீட்டிற்குத் தேவையான பொருள்களை வாங்கி விட்டு பைக்கில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது சரவணம்பட்டி அடுத்த விளாங்குறிச்சி சாலையில் வேறு ஒரு வாகனம் சின்னச்சாமி சென்ற பைக் மீது மோதியது. இதில், தடுமாறி சின்னச்சாமியும் அவரது மனைவியும் கீழே விழுந்தனர். இதில் சின்னச்சாமி மனைவிக்குத் தலையில் அடிபட்டது.
இதையடுத்து அருகில் உள்ளவர்கள் சின்னச்சாமி மனைவியை மீட்டனர். உடனடியாக சின்னச்சாமியின் மனைவியை ஆட்டோவில் அங்கிருந்த நபர் ஒருவர் ஏற்றிக் கொண்டு அத்திப்பாளையம் பிரிவு பகுதியில் உள்ள சிவா மருத்துவமனைக்கு செல்வதாகக் கூறி விட்டு அழைத்துச் சென்றார்.
இதையடுத்து சின்னச்சாமி தனது பைக்கை எடுத்துக் கொண்டு ஆட்டோவை பின்தொடர்ந்து மருத்துவமனைக்குச் சென்றார். மருத்துவமனைக்குச் சென்று பார்த்த பொழுது மனைவியின் கழுத்தில் அணிந்து இருந்த 7-பவுன் தங்க சங்கிலி காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
மேலும் சின்னச்சாமியின் மனைவியை ஆட்டோவில் அழைத்து வந்த மர்ம நபர் அங்கிருந்து மாயமாகி இருந்தார். இதையடுத்து, சின்னச்சாமி சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.